ஜிம் பார்க்ஸ் கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான புதிய ஷாட்களை விளாசக்கூடியவர். முட்டிப்போட்டுக்கொண்டு அடிக்கும் ஷாட் ‘ஸ்லாக் ஸ்வீப்’ ஷாட்டை முதன்முதலாக அடித்தவரும், கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் ஜிம் பார்க்ஸ் தான். இவர் விளாசும் புதிய ஷாட்கள் தான் தற்போது வரை பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.