games

img

அடிக்கடி நிதானத்தை இழக்கும் கேப்டன் ரோஹித் சர்மா

விறுவிறுப்பாக நடை பெற்று வரும் ஆசியக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற 3-வது “சூப்பர் 4” ஆட்டத்தில் இந்திய  அணி இலங்கையிடம் வீழ்ந்து ஆசி யக்கோப்பை தொடரில் இருந்து ஏறக்குறைய வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான “சூப்பர்  4” ஆட்டத்தில் சில தவறு களால் இந்திய அணி தோற்றது போல, இலங்கை அணிக்கு எதி ரான ஆட்டத்திலும் பல்வேறு தவறு களால் பலமான இந்திய அணி, சீனி யர் வீரர்கள் இல்லாத இலங்கை யிடம் மண்ணைக் கவ்வியது.  இதில் முக்கியமானதாக இருப்பது எப்பொழுதும் கூலாக களத்தில் இருக்கும் இந்திய அணி  கேப்டன் ரோஹித் சர்மா ஆசி யக்கோப்பையில் மட்டும் சற்று  நிதானத்தை இழந்து கோப மான செயல்பாட்டை வெளிப்படு த்தியது தான்.

 பாகிஸ்தான் அணிக் கெதிரான “சூப்பர் 4” ஆட்டத்தின் பொழுது அர்ஷ்தீப் கேட்ச் மிஸ் செய்த பொழுது ஆக்ரோஷமாக கத்தினார். அதேபோல புவனேஸ் வர் கேட்ச்சை தவற விட்ட பொழுது பந்தை காலால் எட்டி உதைத்தார்.  முக்கியமாக வீரர்களின் சந்தேகங் களுக்கு உரிய ஆலோசனையுடன் பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு விலகிவிடுகிறார். சில நேரங்களில் பீல்டிங் மாற்றம்  செய்ய கட்டுப்பாட்டை இழந்து வீரர்களை நோக்கி கடிந்துகொள் கிறார். இப்படி நடந்துகொள்வது மற்ற இந்திய வீரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் செயல்படுகிறார். கிரிக்கெட் பீல்டிங்கின் பொழுது கேப்டன் பொறுப்பு என்பது 10 வீரர்களின் பூட்டிற்கு சாவிக் கொத்து போன்று செயல்படும் ஒரு முக்கியமான திறவுகோல் ஆகும். ஆனால் சாவி தனது கட்டுப்பாட்டை இழந்து சரியாக செயல்படவில்லை என்றால் பூட்டு எப்படி திறக்கும் என்பதை போல  தான் ரோஹித் சர்மாவின் கட்டுப் பாடு இல்லாத கேப்டன்ஷிப் ஆசி யக்கோப்பையில் எதிரொலித்து வருகிறது.

அர்ஷ்தீப் சிங்கிடம் மோசமாக நடந்துகொண்ட  ரோஹித் சர்மா

கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். வெற்றி இலக்கு ஒற்றை இலக்காக இருப்ப தால் அர்ஷ்தீப் சிங் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பீல்டிங் மாற்றம் செய்ய கோரினார். ஆனால் ரோஹித் அதனை பட்டென்று கடிந்து கொண்ட படி மறுத்தார்.  பந்துவீசப் போவது அர்ஷ்தீப் சிங் தான். அவருக்கு தான் பேட்டர் எப்படி பந்தை எதிர்கொள்ள போகிறார், பந்து எங்கே, எப்படி செல்லும் என்பது அர்ஷ்தீப் சிங்கின் திட்டமிடலில் தான் உள்ளது. முக்கியமாக கடைசி ஓவரே அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது, அவரது கருத்தை ரோஹித் சர்மா காது கொடுத்து கேட்க மறுப்பது தவறான செயல் ஆகும். அர்ஷ்தீப் சிங்கிற்கு வெறும் 23 வயது தான் ஆகிறது. அந்த வயது வீரர்கள் பக்குவமாக இருக்க மாட்டார்கள். பதற்றம், கோபம் ஆகிய நிலையில் தான் இருப்பா ர்கள். அவர்களை திடப்படுத்தி பக்குவமாக வழி நடத்துவதற்கு கேப்டன் என்ற பொறுப்பு வழங்கப் படுகிறது. இதற்காக தான் கிரிக்கெட் உலகில் பக்குவமாக உள்ள சீனியர் வீரர்களை ஆராய்ந்து கேப்டன் பொறுப்பை வழங்குகிறார்கள். இதனு டைய அருமையை அறியாமல் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் நாளுக்குநாள் தவறு செய்துவருகிறார்.

;