games

img

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி  

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன.  

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.  

முதலில் களம் இறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணி துவக்க வீரர் முகமது ரிஸ்வான்  23 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 46 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.        

இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 19.1ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் எடுத்தார் .