இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் (பார்டர் - காவஸ்கர் டிராபி) விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளின் முடி வில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜ ராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழ னன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து தொடக்கம் முதலே சீரான வேகத்தில் ரன் குவித்தது. இந்திய அணி பந்துவீச்சா ளர்களை அடிக்கடி மாற்றிய பொழு திலும், ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடக்க வீரர் காவஜாவின் சதத்தின் உதவியால் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெள்ளியன்று தொட ர்ந்து நடைபெற்ற 2-ஆம் நாள் ஆட்ட த்திலும் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேட்டை குறையவில்லை. காவஜா வுடன் (180) ஜோடி சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் (114) நிதான வேகத்தில் சதமடித்து, 5-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய ரன் விகிதம் தாறுமாறாக எகிறியது. காவஜா - கிரீன் ஜோடி பெவிலி யன் திரும்பிய பின்பு 9-வது விக்கெட்டு க்கு லியோன் (34) - முர்பி (41) ஜோடி இந்திய அணிக்கு புதிய தலைவலி யை ஏற்படுத்தியது. லியோன் - முர்பி இறுதிக்கட்ட ரான் குவிப்பில் ஈடுபட இந்திய அணி வீரர்கள் முற்றிலும் சோர்ந்தனர். நீண்ட நேர போராட்ட த்திற்கு பிறகு லியோன் - முர்பி ஜோடி யை இந்திய வீரர் அஸ்வின் பிரித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் (17), கில் (18) களத்தில் உள்ளனர்.
கம்மின்ஸ் தாயார் மறைவு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் (டெஸ்ட்) பேட் கம்மின்ஸின் தாயார், மரியா கம்மின்ஸ் உடல் நலக்குறைவால் வெள்ளியன்று அதிகாலை காலமானார். கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு ஆஸ்திரேலிய, இந்திய கிரிக்கெட் வாரியங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. தாயார் உடல்நிலை மோசமடைந்ததால் கம்மின்ஸ் 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.