games

img

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் - இறுதியில் போபண்ணா ஜோடி

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு அடுத்து மிகப்பெரிய (வடஅமெரிக்கா மட்டும்) தொடரான பிஎன்பி பரிபாஸ் ஓபன் என அழைக்கப்படும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் கலிபோர்னியா நகரில் நடை பெற்று வருகிறது.  இந்த டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலி யாவின் எப்டன் ஜோடி அரையிறுதியில்  அமெரிக்காவின் இஸ்னர் - ஷாக் ஜோடியை 7-6 (8-6), 7-6 (6-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி யது. ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, நீல் (பிரிட்டன்) - வெஸ்லி (நெதர்லாந்து) ஜோ டியை எதிர்கொள்கிறது.

ஸ்வியாடெக் அவுட்

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான போலந்தின் ஸ்வியாடெக்கை 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 10-ஆம் இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபைகினா வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனையும், டென்னிஸ் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையுமான சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கிரீஸின் சக்கரியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

சண்டே ஸ்பெஷல்

ரஷ்யா டூ கஜகஸ்தான்

ரைபைகினாவின் வெற்றி ரகசியம்

கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை யான எலினா ரைபைகினா (23 வயது) குறுகிய காலத்தில், மிக விரை வாக டென்னிஸ் உலகில் முக்கிய நட்சத் திர வீராங்கனையாக வளர்ந்து வருப வர். 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்த ரைபை கினா, 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி, மிக கடுமையான போராட்டத்துடன் கஜகஸ்தான் நாட்டு குடியுரிமையை பெற்றார்.  கஜகஸ்தான் நாட்டிற்கு வந்தவு டன்தான் டென்னிஸ் உலகிற்கே ரைபை கினாவை தெரியும். காரணம் ரஷ்யாவில் இருந்த பொழுது ரைபைகினா சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் சரியாக விளையாடவில்லை. 2019-ஆம் ஆண்டு ஸ்டெபனோ என்ற குரோஷிய பயிற்சியாளரின் பயிற்சியில் மிக அதிர டியாக விளையாடக் கற்றுக்கொண்ட ரைபைகினா அடுத்த 2 ஆண்டு கால இடைவெளியில் 2022-ஆம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்  தொடரை கைப்பற்றி டென்னிஸ் உலகை வாயடைக்கச் செய்தார். தொடர்ந்து நடப்பு ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறி கோப்பையை இழந்த ரைபைகினா, தற்போது நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய ஜிபிடி தொடரான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரில் இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

வெற்றி ரகசியம்

ஆடவரைப் போல 6 அடி உயரம் (1.84 செமீ) இருக்கும் ரைபைகினா சற்று வித்தியாசமான ஆட்டத்திறன் கொண்ட வர். எதிர்பக்கம் பந்து வரும் பொழுது உட னடியாக அதிரடியாக திருப்பாமல் மிக மெதுவாக “ஸ்லொ பொசிசன் டெத் ஷாட்” என்ற புதிய வகை ஷாட் மூலம் டென் னிஸ் உலகை மிரட்டி வருகிறார். “ஸ்லொ பொசிசன் டெத் ஷாட்” என்பது மெதுவாக பந்தை எதிர்கொள்வது போன்று திடீரென ஆக்சன் ஷாட்டை விளாசுவது ஆகும். ரைபைகினாவின் இந்த புதிய வகை ஷாட்களை கணிப்பது கடினம். காரணம் சில நேரங்களில் “ஸ்லொ பொசிசனிலேயே” பந்தை ரைபைகினா தட்டி விடுகிறார். இதனால் எதிர் வீராங்கனைகள் அதிரடியா? ஸ்லொ பொசிசன் ஷாட்டா? என ஊகிப்பதி லேயே கடும் சிரமத்தை எதிர்கொள் கின்றனர். மேலும் அதிக உயரமாக இருப்ப தால் பவுன்சர் வகை சர்வீஸ்களையும், ஷாட்களையும் விளாசி எதிரணி வீராங்க னைகளை மிரட்டி வருகிறார் ரைபைகி னா. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்க ளை கொண்டுள்ளதால்தான் ரைபை கினா மிக குறுகிய காலத்தில் நட்சத்திர வீராங்கனையாக வளர்ந்து வருகிறார்.

மும்பை
தொடரை கைப்பற்றுமா 
இந்தியா?
இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்

இந்தியா - ஆஸ்திரேலியா 
இடம் : ஒய்.எஸ்.ஆர் மைதானம், விசாகப்பட்டினம்  (ஆந்திரா)
நேரம் : மதியம் 1:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட்ஸ்டார் (சந்தா செலுத்தினால் மட்டும் ஸ்மார்ட் போனில் பார்க்கலாம்)

 

 


 

;