games

img

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் இந்தியா நிதான ஆட்டம்

தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (செஞ்சுரியன்) இந்திய அணி  அபார வெற்றி பெற்ற  நிலையில், 2 டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ் பார்க்  நகரில் உள்ள வான்டாரர்ஸ் ஸ்டேடியம் மைதானத்தில் திங்களன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியை போல் அல்லா மல் சற்று சுதாரித்து கொண்ட தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் தாக்கு தல் பாணியில் பந்துவீச இந்திய பேட்டர்கள் சற்று திணறினர். தொடக்க வீரர்கள் ராகுல் (19), அகர்வால் (26) மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்து ரன்சேர்த்தனர்.  அடுத்து களமிறங்கிய புஜாரா (3), ரஹானே (0) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க மதிய உணவு இடைவேளையின் பொழுது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டு களை இழந்து 53 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் ஆலிவியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.