ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து முதன்மையான திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து தொடராகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் விடுமுறை நாளான ஞாயிறன்று துவங்குகிறது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கிறது.
துவக்க ஆட்டம்
கத்தார்- ஈக்வடார் நேரம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணி இடம் அல்பாய்த் மைதானம்
பரிசுத்தொகை
மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். கடந்த சீசன் முறையை விட ரூ.328 கோடி கூடுதலாக பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது சீசன் உலகக்கோப்பையில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
சாம்பியன் பட்டம் : ரூ.344 கோடி (42 மில்லியன் டாலர்)
2-ஆம் இடம் : ரூ.245 கோடி (30 மில்லியன் டாலர்)
3-ஆம் இடம் : ரூ.220 கோடி (27 மில்லியன் டாலர்)
4-வது இடம் : ரூ.204 கோடி (25 மில்லியன் டாலர்)
5 முதல் 8-வது இடம் வரை : ரூ.138 கோடி (17 மில்லியன் டாலர்)
9 முதல் 17-வது இடம் வரை : ரூ. 106 கோடி (17 மில்லியன் டாலர்)
17 முதல் 32-வது இடம் வரை : ரூ. 74 கோடி (9 மில்லியன் டாலர்)
உலகக்கோப்பை தொடரில் களமிறங்கும் 32 அணிகளுக்கும் கண்டிப்பாக குறைந்தபட்சம் ரூ.70 கோடிக்கு மேல் பரிசுத் தொகை கிடைத்துவிடும். வெறுங்கையுடன் யாருமே நாடும் திரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவுகள்
குரூப் ஏ: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து குரூப் பி: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் குரூப் சி: அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து குரூப் டி: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா குரூப் இ: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் குரூப் எப் : பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேசியா குரூப் ஜி: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் குரூப் எச்: போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா
தனி கிராமம்...
தங்குமிடத்திலேயே நட்சத்திர விடுதிகள், வில்லாக்கள், ஓய்வு விடுதிகள், விளையாட்டு அகாடமி குடியிருப்புகள், தற்காலிக வீடுகள் என 32 நாடுகளின் வீரர்களுக்கு ஒரு குட்டி கிராமத்தையே பிரித்து கொடுத்துள்ளது கத்தார் அரசு. சொந்த நாடாக இருந்தாலும் கத்தாருக்கு சிறப்பு வசதிகள் எதுவும் கிடையாது.31 நாடுகளுக்கு வழங்கப்படும் சரிசமமான வசதிகள்தான். ஜெர்மனி, சவூதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மட்டுமே தலைநகர் தோஹா பகுதியில் சாராமல் கத்தார் நாட்டின் எல்லை பகுதிகளில் தங்கியுள்ளது. மற்ற 29 நாடுகளும் தோஹா தலைநகர் வட்டத்தில் தான் தங்கியுள்ளது.
இந்தியாவில்...
ஸ்போர்ட்ஸ் 18, ஸ்போர்ட்ஸ் 18 (எச்டி) இலவசமாக காணலாம்
ஆன்லைன் பிளாட்பாரம் : ஜியோ சினிமா (JIO CINIMA), ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களும் ஜியோ சினிமா மூலம் இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வூட் (VOOT) மொபைல் ஆப் மூலமும் போட்டிகளை நேரலையில் காணலாம். இதற்கு சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.
உதை வாங்க தயாராக இருக்கும் மைதானங்கள்
அல் பேத்(அல் ஹோர்)
அல் ஹோர் நகரில் அமைந்துள்ள இந்த மைதானம் கத்தாரின் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படும் கருப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட கூடாரமான “பைத் அல் ஷார்” போன்று கட்டப்பட்டுள்ளது.
இருக்கை ; 60 ஆயிரம் பேர்
ஆட்டங்கள் ; துவக்க ஆட்டம் உட்பட 6 லீக்,
ஒரு நாக் அவுட், ஒரு காலிறுதி, ஒரு அரையிறுதி
லுசைல் ஐகானிக் (தோஹா)
மத்திய தோகாவில் இருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லுசைல் மைதானம் கத்தாரின் மிகப்பெரிய மைதானம் ஆகும்.
ஆட்டங்கள் ; 6 லீக், ஒரு நாக் அவுட், ஒரு காலிறுதி, ஒரு அரையிறுதி இறுதிப்போட்டி என அனைத்து வகையான ஆட்டங்களும்
அகமது பின் அலி (அல் ரய்யான்)
பாலைவனத்தை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அழகிய மைதானம் ஆகும்
இருக்கை ; 40 ஆயிரம் பேர் ஆட்டங்கள் ; 6 லீக், ஒரு நாக் அவுட்
கலீஃபா - தோஹா
1976-ல் கட்டப்பட்ட இந்த மைதானம் கத்தாருக்கு உலகக்கோப்பையை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு இருந்த ஒரே மைதானம் இதுதான்.
இருக்கை ; 40 ஆயிரம் பேர் ஆட்டங்கள் ; லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், ஒரு நாக் அவுட், 3-வது இடத்திற்கான ஆட்டம்
அல் துமாமா - தோஹா
மத்திய கிழக்கு நாடுகளில் ஆண்கள் அணியும் பாரம்பரிய தொப்பியான காஃபியா எனப்படும் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
இருக்கை ; 40 ஆயிரம் பேர் அமரலாம் ஆட்டங்கள் ; லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், ஒரு நாக் அவுட், ஒரு காலிறுதி
அல் ஜனூப் - தோஹா
முத்து மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது.
இருக்கை ; 40 ஆயிரம் பேர் அமரலாம் ஆட்டங்கள் ; லீக் சுற்றின் 6 ஆட்டங்கள், ஒரு நாக் அவுட்
974 - தோஹா
ஷிப்பிங் கொள்கலன் களால் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் உலகக் கோப்பைக்குப் பிறகு முற்றிலும் அகற்றப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது. 974 என்ற எண் கத்தா ருக்கான சர்வதேச தொலை பேசி குறியீடு மற்றும் அரங்கத்தின் கட்டு மானத்திற்காக பயன்படுத்தப் படும் கொள்கலன்களின் எண்ணிக்கையையும் குறிக்கிறது.
இருக்கை ; 40 ஆயிரம் பேர் ஆட்டங்கள் ; 6 லீக், ஒரு நாக் அவுட்
எஜூகேசன் சிட்டி
“பாலைவனத்தின் வைரம்” என்று அழைக்கப்படும் எஜூ கேசன் சிட்டியில் இந்த மைதானம் அமைந்துள்ளது. கால்பந்து திருவிழா முடிவடைந்ததும் மைதானத்தின் இருக்கைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அந்த இருக்கைகள் வளரும் நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருக்கை ; 45,350 பேர் அமரலாம் ஆட்டங்கள் ; 6 லீக், ஒரு நாக் அவுட், ஒரு காலிறுதி
அணிகள் 32
பிரேசில் - (உலகத்தரவரிசை: 1)
அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையுடன் 6-வது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் நோக்கத்துடன் கத்தாரில் களமிறங்குகிறது. கால்பந்து என்றால் பிரேசில் என்ற புகழுக்குச் சொந்தக்காரர்கள். ஆசியக் கண்டத்தில் முதல் முறையாக 2002ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ஏற்பட்ட நீண்ட இருபதாண்டு இடைவெளிக்கு பரிகாரம் தேடுகிறது. மேலும் 2014ல் சொந்த மண்ணில் ஜெர்மனியிடம் அடைந்த தோல்வி மாயாத வடுவாக உள்ளது. பயிற்சியாளர்: அடனோர்லி லியனார்டோ என்ற டிட்டா முக்கிய வீரர்கள்: நெய்மர், வினிஷியஸ் ஜூனியர், காஸமிரோ, டியாகோ சில்வா
பெண்கள் மீது தனிக்கவனம்
1.மைதானத்தில் பெண் ரசிகர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
2.மைதானம் தவிர்த்து கத்தார் நாட்டின் பொதுவெளியில் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியலாம் எனக் கூறப்பட்டாலும். அருங்காட்சியகங்கள் மற்றும் பிற அரசு கட்டிடங்கள் போன்ற பொது இடங்களுக்குச்செல்லும்போது பார்வையாளர்கள் தங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்க வேண்டும் என அரசு மற்றும் பிபா சாறில் கூறப்பட்டு உள்ளது.
3.குறிப்பிட்ட இருக்கையை பெரிதாக பார்க்கவும், பார்வையாளரைத் தெளிவாகப் பார்க்கவும் எங்களிடம் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிறப்பு கேமராக்கள் உள்ளன. எனவே நிகழ்வுக்கு பிந்தைய விசாரணை செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஈகுவடார்: (உலகத்தரவரிசை: 44)
நான்காவது முறையாக மீண்டும் தகுதி பெற்றுள்ளது. பயிற்சியாளர்: குஸ்தாவோ அல்பாரோ நட்சத்திர வீரர்: ஜெரமி ஸர்மினியோ
நெதர்லாந்து-(உலகத்தரவரிசை:8)
தற்போது 11-வது முறையாகத் உலகக்கோப்பையில் களமிறங்குகிறது பயிற்சியாளர்: லூயிஸ் வான்கெல் நட்சத்திர வீரர்: விர்ஜின் வான் டிக்
செனகல்-(உலகத்தரவரிசை:18)
2வது முறையாக களமிறங்குகிறது.பயிற்சியாளர்: அலியோ ஸிஸே முக்கிய வீரர்: இத்ரிஸ்டாகுயே
கத்தார்-(உலகத்தரவரிசை: 50)
போட்டிகளை நடத்தும் நாடு என்ற தகுதியுடன் உலகக்கோப்பையில் முதல் முறையாகக் களமிறங்குகிறது.பயிற்சியாளர்: பெலிக்ஸ் சாஞ்சஸ் முக்கிய வீரர்: அல்மூ ஈஸ் அலி
இங்கிலாந்து-
(உலகத்தரவரிசை: 5)1966ல் சொந்த நாட்டில் நடந்த போட்டியில் கோப்பை வென்ற அணி. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி சாதனைகள் ஏதும் இல்லை. பயிற்சியாளர்: காரெத் சவுத்கேட் நட்சத்திர வீரர்: ஹாரி கேன்
ஈரான்-உலகத்தரவரிசை: 20
6-வது முறையாக களம் காணுகிறது. பயிற்சியாளர்: கார்லோஸ் க்விரோஸ்நட்சத்திர வீரர்: அலிரஸா ஜகன்பெக்
அமெரிக்கா-(உலகத்தரவரிசை: 16)
21-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறவில்லை.பயிற்சியாளர்: க்ரஹ் பெர்ஹால்டர்நட்சத்திர வீரர்: கிறிஸ்டியன் புலிஸிச்
வேல்ஸ்-(உலகத்தரவரிசை: 19)
64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது. பயிற்சியாளர்: ரோப் பேஜ்நட்சத்திர வீரர்: காரெத் பாலே
அர்ஜெண்டினா-
(உலகத் தரவரிசை: 3)
18-வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.4 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, 2 முறை கோப்பை வென்ற அணி (1978,1986) அர்ஜெண்டினா பயிற்சியாளர்: லயனல் ஸ்கலோனி நட்சத்திர வீரர்: லயனல் மெஸ்ஸி
சவூதி அரேபியா- (உலகத்தரவரிசை: 51)
6வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதி. பயிற்சியாளர்: ஹெர்வி ரெனார்டுநட்சத்திர வீரர்: சலே அல் ஷெக்ரி
மெக்சிகோ-(உலகத்தரவரிசை: 13)
18-வது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குகிறதுபயிற்சியாளர்: ஜெரால்டு மார்ட்டினோநட்சத்திர வீரர்: கில்லர் மோ ஒச்சாவோ
போலந்து-(உலகத்தரவரிசை: 26)
உலகக் கோப்பை போட்டிகளுக்கு 8வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. பயிற்சியாளர்: செஸி லாவ் மிக்னிவிக்ஸ்நட்சத்திர வீரர்: ரோபர்ட் லெவன்டோவஸ்கி
பிரான்ஸ்-(உலகத்தரவரிசை: 4)
16 வது முறை நட்சத்திர வீரர்களின் படைவரிசையோடு களமிறங்கும் நடப்புச் சாம்பியன்பயிற்சியாளர்: திதியர் தெஹாம்நட்சத்திர வீரர்: கிலியன் மாப்பே
துனிஷியா-(உலகத்தரவரிசை: 30)
6-வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது.பயிற்சியாளர்: ஜலீல் கெத்ரி நட்சத்திர வீரர் : யூசுப் மஸாக்னி
டென்மார்க்-(உலகத்தரவரிசை: 10)
6-வது முறையாக களமிறங்குகிறது பயிற்சியாளர்: கஸ்பர் கல்மெண்ட் நட்சத்திர வீரர்: கிறிஸ்டியன் எரிக்சன்,
ஆஸ்திரேலியா- (உலகத்தரவரிசை: 38)
2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுவருகிறது. பயிற்சியாளர்: கிரஹாம் அர்னால்டு நட்சத்திர வீரர் : ஜமி மக்லான்
ஸ்பெயின்-(உலகத்தரவரிசை: 7)
2010ல் கோப்பையை வென்ற அணி 16வது முறையாக உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.பயிற்சியாளர்: லூயிஸ் என்ட்ரிக்வேநட்சத்திர வீரர் : பெரான் டோரஸ்
ஜெர்மனி- (உலகத்தரவரிசை: 11)
20-வது முறையாக களமிறங்கியுள்ள ஜெர்மனி, 8 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.பயிற்சியாளர்: ஹான்ஸி பிளிக்முக்கிய வீரர்: ஜெர்ஜி நாப்ரி
ஜப்பான் - (உலகத்தரவரிசை: 24)
1998 முதல் தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவருகிறது. பயிற்சியாளர்: ஹாஜியோ மொரியஸ்முக்கிய வீரர்: தகுமி மினாமினோ
கோஸ்டாரிகா - (உலகத்தரவரிசை:31)
உலகக் கோப்பை போட்டிகளுக்கு இது ஐந்தாவது முறை.பயிற்சியாளர்: லூயிஸ் பெர்னாண்டோ ஸுவாரஸ்முக்கிய வீரர்: ஸெல்கோ பெர்ஜஸ்
பெல்ஜியம்-(உலகத்தரவரிசை: 2)
14வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.பயிற்சியாளர்: ரோபர்டோ மார்ட்டினஸ்முக்கிய வீரர்:ரொமேலு லூக்காகு
கனடா- (உலகத்தரவரிசை:41)
36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பு.பயிற்சியாளர்: ஜான் ஹெர்ட்மான்முக்கிய வீரர்: அல்போன்ஸா டேவிஸ்
மொராக்கோ-(உலகத்தரவரிசை: 22)
உலகக்கோப்பைக்கு இது ஆறாவது முறை.பயிற்சியாளர்: வாலித் ரெக்ராய்யூ முக்கிய வீரர்: அயூப் எல் கேபி
குரோஷியா-(உலகத்தரவரிசை: 12)
6-முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குரோஷியா கடந்த சீசனில் பிரான்சிடம் தோற்று இரண்டாமிடம் பிடித்தது. பயிற்சியாளர்: ஸ்டாட்கோ டாலிச்முக்கிய வீரர்: மரியோ பஸாலிச்
செர்பியா - (உலகத்தரவரிசை:21)
இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.பயிற்சியாளர்: டிராகன் ஸ்ட்ரொக்கோவிச் முக்கிய வீரர்: துஸான் டாடிச்
சுவிட்சர்லாந்து-
(உலகத்தர வரிசை:15)
12வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறது. போராட்டக்குணம் மிக்க அணி என்ற பெயர் பெற்றது. பயிற்சியாளர்: முராத் யாகின்முக்கிய வீரர்: ஷெர்தான் ஷக்கிரி
தென்கொரியா - (உலகத்தர வரிசை:28)
11வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. பயிற்சியாளர்: பல்லோ பென்டோ முக்கிய வீரர்:ஸன் ஹூங் மின்
கானா - (உலகத்தரவரிசை:61)
4வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கிறதுபயிற்சியாளர்: ஒட்டுஅடூ.முக்கிய வீரர்: ஆன்ட்ரே அயூ
கேமரூன் -(உலகத்தரவரிசை:43)
ஆப்பிரிக்க சிங்கம் என்ற பெருமை கொண்ட கேமரூன் 8-வது முறையாகப் பங்கேற்கிறது.பயிற்சியாளர்: ரிகோபர்ட் ஸாங்முக்கிய வீரர்: ஆந்த்ரே ஒனானே
போர்ச்சுக்கல் - (உலகத்தரவரிசை:9)
8வது முறையாக தகுதி பெற்றுள்ள போர்ச்சுக்கல் உலகக்கோப்பையில் தகுதி சுற்றுப் போட்டிகளில் பிளே ஆஃப் வந்துள்ளது.
பயிற்சியாளர்: பெர்னாண்டோ சான்ட்ரோஸ்முக்கிய வீரர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
உருகுவே - (உலகத்தரவரிசை: 14)
முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட அணி. 2 முறை உலகச் சாம்பியன். 1950க்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் பெருமைகள் இல்லை. 14வது முறையாகக் களம் காண்கிறது.பயிற்சியாளர்: தியாகோ அலென்ஸோ
முக்கிய வீரர்: சுவாரஸ், எடின்சன் கவானி