மகளிர் உலகக்கோப்பை கால்பந்து
ஜப்பான் கலக்கல்
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் வியாழனன்று தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங் கள் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று குரூப் சி பிரிவில் உள்ள ஜப்பான் - ஜாம்பியா அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியா, புரட்டியெடுத்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் அமெரிக்கா வியட்நாமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டங்கள்
ஸ்வீடன் - தென் ஆப்பிரிக்கா
நேரம் : காலை 10:30 மணிக்கு
நெதர்லாந்து - போர்ச்சுக்கல்
நேரம் : மதியம் 1:00 மணிக்கு
பிரான்ஸ் - ஜமைக்கா
நேரம் : மதியம் 3:30 மணிக்கு
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)
ராணுவ வீரர்களுக்கு நிகராக பயிற்சி?
ஆட்டத்திறனில் முன்னேற்றம் கண்ட மேற்கு இந்தியத் தீவுகள்
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி வெள்ளியன்று தொடங்கியது. நட்சத்திர வீரர்கள் இல்லாமல் மூன்றாம் தர வீரர்க ளுடன் விளையாடி வரும் மேற்கு இந்தி யத் தீவுகள் அணி முதல் டெஸ்ட் போட்டி யை விட 2-வது டெஸ்ட் போட்டியில் சற்று சிறப்பாக விளையாடி வருகிறது. ஆட்டத்திறனிலும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. வரும் காலங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் நிச்சயமாக வளரும். வெகுகாலம் இல்லை. நடப்பு சீசன் உல கக்கோப்பை சீசனுக்குள் முன்னேறி விடும். காரணம் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அணியை வலுவாக்க ராணுவ வீரர்களுக்கு நிகராக பயிற்சி மற்றும் நுணுக்கம் அளிக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருபக்கம் வெயில்.... ஒருபக்கம் மழை
காலநிலை மாற்றத்தால் ஐரோப்பா கண்டத்தில் வானிலை நிலவரம் கடந்த காலங்களை விட நடப்பு ஆண்டில் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. அதாவது ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன் மார்க்கத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இந்த மார்க்கத்திற்கு அருகில் உள்ள இங்கிலாந்து நாடோ மிரட்டல் மழையை எதிர்கொண்டு வருகிறது. இந்த மழையால் ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்ட் பாதிக் கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வெயில்.... ஒருபக்கம் மழை என ஐரோப்பா கண்டத்தில் இப்படி ஒரு நிலைமை இருந்தது இல்லை.
களத்தில் இன்று
இந்தியா - மே.இ.தீவுகள்
(2-வது டெஸ்ட். 3-வது நாள்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிநாட்
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா, பேன்கோடு
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
ஆஷஸ் (4-வது, 5-வது நாள்)
நேரம் : மதியம் 3:30 மணிக்கு
இடம் : ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)