நாட்டின் முதன்மையான கால்பந்து தொடர்களில் ஒன்றான சந்தோஷ் கோப்பை தொடரின் 75-வது சீசன் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கேரளா, மேற்குவங்கம், கர்நாடகா, மணீப்பூர் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் வியாழ னன்று தொடங்குகின்றன. முதல் அரை யிறுதியில் கேரளா - கர்நாடகா அணிகள் மோதுகின்றன. வெள்ளி யன்று நடைபெறும் 2-வது அரையிறுதி யில் மணீப்பூர் - மேற்கு வங்கம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.