புரோ கபடி 2023 : இன்று விடுமுறை
குறுகிய காலத்தில் பிரபலமான தொடராக வளர்ந்துள்ள 10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3-ஆவது கட்ட லீக் ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புதனன்று நிறைவு பெற்ற நிலையில், 3-ஆவது கட்ட லீக் ஆட்டத்தின் களைப்பை போக்க வியாழனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4-ஆவது கட்ட லீக் ஆட்டம் வெள்ளியன்று தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்குகிறது. சென்னையில் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மொத்தம் 11 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை?
சென்னையில் நடைபெறும் 4-ஆம் கட்ட லீக் ஆட்டங் களுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெவிலியன்களை பொறுத்து டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கட்டுள்ளது.
பெவிலியன்களும், விலைகளும்...
பெவிலியன் “ஏ” முதல் “ஜே” பிளாக் - ரூ.500 முதல் ரூ.1500 பெவிலியனின் நடுப்பகுதி (போர்ஸ் மோட்டார்ஸ் ஸ்டாண்ட்) - ரூ.1500-க்கு மேல் (தோராயமாக) பிளாக் “எல்”- ரூ.3500-க்கு (ஆடுகளத்திற்கு அருகில்) ஹாஸ்பிட்டலி பிளாக் டிக்கெட் விலை - ரூ.6000 (பெவி லியனுக்கு கீழே-மைதான பிட்ச் பகுதிக்கு அருகே) புரோ கபடி லீக் டிக்கெட்டுகள் பெற புக் மை ஷோ (BOOK MY SHOW) தளத்தில் பெறலாம். டிக்கெட்டுகள் பெற லிங்க் : https://in.bookmyshow.com/ கிரிக்கெட் விளையாட்டுப் போன்று புரோ கபடி மைதானங் களில் அதிக இருக்கைகள் கிடையாது. மிகக்குறை வாகவே இருக்கைகள் இருப்பதால் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வது நல்லது. இடம் : எஸ்டிஏடி ஜவகர்லால் நேரு மைதானம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு சென்னை
ஐபிஎல் ஏலம்
ஆஸ்திரேலிய வீரர்களின் விலைகளும், சர்ச்சைகளும்
17-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு (2024) கோடை காலத்திற்கு முன்பு துவங்கவுள்ள நிலை யில், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி யின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையுடன் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கி யது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், நடப்பு சீசன் ஒருநாள் உலகக்கோப்பையை பெற்றுத் தந்தவருமான கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி கோப்பை வெல்ல உதவிய தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கும் ஹைதராபாத் அணி வாங்கியது. மேலும் ஸ்பென்சர் ஜான்சன் எனும் ஆஸ்திரேலிய வீரரை ரூ.10 கோடி கொடுத்து குஜராத் அணி வாங்கியது. சர்ச்சைகள்: உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்ததன் ஒரே காரணத்திற்காக கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட்டை அதிக விலை கொடுத்து வாங்கி யுள்ளது ஹைதராபாத் அணி. ஆனால் இருவரும் டி-20 ஆட்டத்திற்கு சரியான திறன் கொண்டவர்கள் இல்லை. கம்மின்ஸ் கேப்டன்ஷிப்பில் திறமை வாய்ந்தவராக இருந்தாலும் பந்துவீச்சு மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் திறன் கொண்டவர். அதே போல டிராவிஸ் ஹெட் அதிரடி இல்லாமல் டெஸ்ட் போட்டிக்கான மந்தமான பேட்டிங் திறன் கொண்ட வீரர் ஆவர். எப்பொழுதாவது அதிரடியாக விளை யாடுவார் அவ்வளவுதான். இதில் ஸ்பென்சர் ஜான்சன் (இடதுகை பந்து வீச்சாளர்) சர்வதேச கிரிக்கெட் உல கிற்கு யாரென்றே சரியாக தெரியாது. ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவரை ரூ.10 கோடி க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வாங்கப்பட்ட தொகை பற்றி எதிர்மறையாக விமர்சிக்க முடி யாது. காரணம் அவர் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் இக்கட்டான நேரங் களில் சீரிய ஆலோசனைகள் வழங்கி அசத்தலாக செயல்படக்கூடியவர். இதே போல மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ.5 கோடிக்கு தில்லி அணி வாங்கியுள்ள தற்கு விமர்சனம் எழ வாய்ப்பில்லை.