games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

நூலிழையில் பதக்கத்தை இழந்த மனுபாக்கர்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. 3 பதக்கமும் துப்பாக்கிசூடுதலில் இருந்து கிடைத்துள்ள நிலையில், இதில் 2 பதக்கம் (மகளிர் 10 மீ ஏர்  பிஸ்டல் தனிநபர் மற்றும் 10 மீ ஏர்  பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில்) மனுபாக்கர் மூலம் கிடைத்தது. தொடர்ந்து 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனுபாக்கர் இறுதிச் சுற்றிற்கு முன் னேறிய நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சனியன்று மதியம் நடைபெற்ற இறு திச்சுற்றில்  கடுமையான போராட்டத்து டன் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காம் இடம் பிடித்தார் மனுபாக்கர்.

கதறி அழுத மனுபாக்கர்

போட்டி முடிந்த பிறகு கண்ணீ ரோடு மனம் வருந்தி பேசிய மனு பாக்கர், “இறுதிப்போட்டியில் மிகவும் பதற்றமாக இருந்தேன். களம் எனக்கு சாதகமாக அமையவில்லை. என்னு டைய சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கவே முயன்றேன். இரண்டு பதக்கங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த நான்காவது இடத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைக்குதான் மதிய உணவை அருந்தப் போகிறேன். இங்கே இத்த னை நாட்களாகக் காலை உணவை அருந்திவிட்டு பயிற்சிக்கு வந்துவிடு வேன். மாலைதான் திரும்புவேன். அத னால் இன்றைக்குதான் போட்டிக ளெல்லாம் முடிந்துவிட்டதால் மதிய  உணவை எடுத்துக்கொள்ளப் போகி றேன்” எனக் கூறினார்.


ஒலிம்பிக் பதக்க மேடையில் மலர்ந்த காதல்
உலகளவில் டிரெண்ட் ஆகும் சீனர்களின் வீடியோ

விளையாட்டு உலகில் அதிரடி ஆட்டம், சாதனை, வேதனை உள்ளிட்ட சம்பவங்களுக்கு இடையே இளசுகளின் காதல் தொடர்பான சுவா ரஸ்ய சம்பவங்களும் அரங்கேறும் என்ற நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் சீன வீரர் - வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்க மேடையில் காதலை பரிமாறிக் கொண்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் - செங் ஜோடி தென் கொரியா ஜோடியை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தை வென்றனர். ஹுவாங் தங்கப்பதக்கத்தை பெற்று  மேடையில் இருந்து கீழே இறங்கிய பொழுது, மற்றொரு சீனப் பேட்மிண் டன் வீரர் லியூ யூசென், தம்மைத் திரு மணம் செய்து கொள்ளுமாறு கேட்டு ஹுவாங்கிடம் மோதிரத்தை நீட்டினார். இதைக் கண்டரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், இந்த திடீர் சம்ப வத்தால் சற்றும் எதிர்பாராத ஹுவாங் திகைத்துப் போனார். தொடர்ந்து லியூ  யூசென்னின் காதலை ஏற்றுக்கொண்ட பின், அவருக்கு மோதிரத்தை அணி வித்தார். இதைக் கண்டு ஹுவாங்கி னால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வை வீடி யோவாக பதிவு செய்த அருகில் இருந்த வர்கள் அதை இணையத்தில் வெளியிட் டனர். தற்போது இந்த வீடியோ உல களவில் டாப்  டிரெண்டிங்கில் வைர லாகி வருகிறது.

இந்திய வீரர்களுக்கு தனியாக குளிர்சாதன வசதி

40 கையடக்க ஏ.சி.,க்களை அனுப்பிவைத்த இந்திய ஒலிம்பிக் சங்கம்

ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காலநிலை மாற்றத்தால் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் கடும் உஷ்ணம் காரணமாக இந்திய வீரர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கடும் உஷ்ணத்தால் அவதிப்படும் இந்தியர்களுக்கு 40 கையடக்க ஏசிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் 40 கையடக்க ஏ.சி.,க்களையும் பிரான்ஸ் தூதரகம் மூலம் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.