ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் டிரா ஆனது.
இதையடுத்து நேற்று தென்கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசிய கோப்பை 2022 இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி அணி ஆட்டத்தில் இந்தியா ஜப்பானை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில், இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.