facebook-round

img

உண்மையைச் சொன்னால் உடம்பு எரிவது ஏன்? -அருணன்

"அமைச்சரவையில் உயர்சாதியினர் ஆதிக்கம்": டிஒஐ ஏடு

மோடி அமைச்சரவையில் உயர்சாதியினர் ஆதிக்கம் எனும் எனது பதிவு கண்டு பாஜகவினர் பதறுகிறார்கள். இது டைம்ஸ் ஆப் இண்டியா ஏடு தந்துள்ள தகவல். அதன் மே 31 இதழ் கூறியது: "மோடி அமைச்சரவையில் உயர்சாதியினரின் ஆதிக்கம் உள்ளது. 58 அமைச்சர்களில் 32பேர் உயர்சாதியினர், ஒபிசியினர் 13 பேர். கேபினட்டில் 9 பேர் பிராமணர்கள், 3 பேர் தாக்கூர்கள்". கேபினட்டில் மொத்தம் 24பேர். அப்படியெனில் அதில் 50% உயர்சாதியினர்தானே. இந்த உண்மையைச் சொன்னால் உடம்பு எரிவது ஏன்? 

மத்திய அரசு என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது. அதன் ஊழியர்களின் நியமனத்தில் எப்படி சமூகநீதி வேண்டப்படுகிறதோ அப்படி அமைச்சர்களிலும் தேவை. பாஜக எனும் அரசியல் கட்சி பற்றி அந்த பத்திரிகை பேசவில்லை, அரசு பற்றி பேசுகிறது. "இந்து ராஷ்டிரம்" என்பவர்களின் அரசில் ஏன் இப்படி ஒரு பகுதி இந்துக்களுக்கு மட்டும் அதிக இடம் எனக் கேட்கக்கூடாதா? கேட்டால் குமுறுகிறார்கள் என்றால்  உண்மை சுடுகிறது, அவர்களின் மனுவாதம் அம்பலமாகிறது என்று அர்த்தம்.

-

;