election2021

img

பாஜகவுக்கு நான்கு மாநிலங்களில் தோல்வி உறுதியாகி விட்டது..... தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கணிப்பு....

மும்பை:
தமிழகம், மேற்குவங்கம், கேரளா,அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில்தற்போதே 4 மாநிலங்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்சரத்பவார் மேலும் கூறியிருப்பதாவது:

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். கேரளத்தைப் பொறுத்தவரை, அங்கு இடதுசாரிகளும் நாங்களும் கூட்டணிஅமைத்துள்ளோம். அங்கு எங் களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.தமிழ்நாட்டில் மக்கள் திமுகமற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு தருவார்கள். தேர்தலுக்குப் பிறகு திமுகவே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.அசாம், மேற்குவங்கத்தில் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். 

அசாம் மாநிலத்தின் நிலைமையும் தனக்கு நன்றாகவே தெரியும். அங்கு மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், பாஜக நல்ல நிலையில்உள்ளது. அசாமில் பாஜக மீண்டும்ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மற்ற அனைத்து மாநிலங்களிலும் அது படுதோல்வி அடையும். மற்றஅரசியல் கட்சிகளே அங்கு ஆட்சிக்கு வரும். இது, நாடு புதிய பாதையில் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.

;