election2021

img

தொலைநோக்குப் பார்வையோ, புரிதலோ இல்லாதவர் மோடி.... பொய்களை கட்டவிழ்த்துவிட மட்டுமே தெரியும்... பிரசாந்த் கிஷோர் சாடல்...

கொல்கத்தா:
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விஷயத்தில் பொறுப்பை மக்களிடம் தள்ளிவிட பிரதமர் மோடி முயல்வதாகவும், தனது புரிதலின்மை மற்றும்தொலைநோக்குப் பார்வையின்மையை மறைக்கவே இவ் வாறு அவர் செய்வதாகவும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் வேகமெடுத் துள்ள நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர்மோடி, கொரோனா பரவல் இரண்டாம் அலை நாட்டைச் சூறாவளிபோல தாக்கி வருவதாகவும் மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இனி மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என் றும் அறிவித்தார்.இந்நிலையில், ‘ஐபேக்’ (I-PAC) நிறுவனத்தின் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து, டுவிட்டரில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், மோடி அரசு தற்போதுள்ள நெருக் கடியைக் கையாளும் விதம் எனநான்கு விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார். 
அவை 1. புரிதல் மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததால் சிக்கலைப் புறக்கணித்தல் 2. திடீரென அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, வெற்றியடையப் பொய்களை கட்டவிழ்த்து விடுதல் 3. சிக்கல் தொடரும்பட்சத்தில்,அதற்குக் காரணம் மற்றவர்கள் தான் என திசைத்திருப்புதல் 4.தானாகவே சூழ்நிலை மேம்பட் டால், தனது ‘பக்த்’ (பக்தர்கள்) ராணுவத்தின் துணையுடன் அதற்கான புகழை எடுத்துக் கொள்ளுதல்.. என்று கூறியுள்ள பிரசாந்த் கிஷோர், இவைதான் மோடிஅரசின் தந்திரங்களாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

;