election2021

img

‘சண்டிபாத்’ மந்திரம் சொல்லும் இந்து பிராமணப் பெண் நான்... பாஜகவுக்கு தன்னிலை விளக்கம் தந்த மம்தா....

நந்திகிராம்:
தான் ஒரு பிராமணப் பெண் என்பதால், இந்து தர்மங்கள் அனைத்தும் தனக்கும் தெரியும் என்று, திரிணாமுல் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறி
யுள்ளார்.
மேற்குவங்கத்தில் மத ரீதியாக வாக்குகளை திரட் டும் முயற்சியில் மம்தாபானர்ஜியும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாயன்று வாக்குசேகரித்த மம்தா பானர்ஜி, “தானும் ஒரு இந்து பிராமணப் பெண்தான்” என்று கூறியுள்ளார். “இந்துத்துவா முத்திரையை வைத்து பாஜக என்னிடம் அரசியல் செய்ய வேண் டாம். ஏனென்றால், நானும் ஒரு இந்து பிராமணப் பெண்தான். எனக்கு இந்து தர்மத்தை பாஜக கற்பிக்க வேண்டாம். தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் முன்புநான் துர்கா தேவிக்கான ‘சண் டிபாத்’ செய்துவிட்டுத்தான் கிளம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது பிரச்சாரத்தில் ‘சண்டிபாத்’ மந்திர ஸ்லோகங்களையும் மக்கள் மத்தியில் உச்சாடனம் செய்துள்ளார்.“இதனிடையே, மம்தா பானர்ஜி ‘சண்டிபாத்’ மந்திரங்களைத் தவறாக உச்சரித்துள்ளார். சரியான மந்திரங்களை ஆதித்யநாத் மட் டுமே பாட முடியும். அவர் மேற்குவங்கம் வந்து, மம்தாவுக்குச் சரியான மந்திரங்களைக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஆதித்யநாத் மேற்கு வங்கம் வரவேண் டும் என்று விரும்புகிறேன்” என்று நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில்போட்டியிடும் சுபேந்து அதிகாரி கிண்டல் அடித்துள்ளார்.இவர் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பதாக சவால் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;