election2021

img

சிக்கிக் கொண்டார் ரங்கசாமி....

புதுச்சேரியில் ஒரு வழியாக ரங்கசாமியை தனது அணிக்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டது பாஜக. தனது கட்சியை பாஜக நிச்சயம் விழுங்கிவிடும் என்று உணர்ந்தவுடன் அதன் பிடியிலிருந்து நைசாக வெளியேறிவிடலாம் என்று ரங்கசாமி முயற்சித்துப் பார்த்தார். முதல்வர் பதவி ரங்கசாமிக்கு இல்லை என்று பாஜக கூறியதை காரணமாக வைத்தேனும் கழன்றுகொள்ளலாம் என்று ரங்கசாமி கட்சி திட்டம் போட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் ரங்கசாமியை சம்மதிக்க வைத்தோ, அல்லது மிரட்டல் விடுத்தோ, கூட்டணியை உறுதிசெய்து கொண்டது பாஜக.அதன் அடிப்படையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ரங்கசாமியின் என்ஆர்காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக மற்றும் அதிமுக 14 இடங்களிலும் போட்டியிடப்போவதாக ஒப்பந்தம் போட்டு முடிவு செய்திருக்கிறார்கள். 

;