election2021

img

பாமக ஓர் அரசியல் கட்சி அல்ல.... ராமதாஸின் குடும்பச் சொத்து....

அதிமுக-பாஜக கூட்டணி என்பது கடையாணி கழன்ற கட்டவண்டியை போன்று மாறியிருக்கிறது. அதிமுகவினர் மோடியின் படத்தையே தூக்கிப்பிடிக்க மறுக்கிறார்கள்.மோடியின் முகத்தைக் காட்டினால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் வாக்குக்கிடைக்காது.எனவே நம்முடைய வாக்கை நாமே ஏன் பறிக்கவேண்டும் என்கிற முறையில் மோடிபடத்தை தூக்குவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கூட்டணியில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்ந்து கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

பாமகவின் வரலாற்றைப்பற்றி தெரிந்தவர்கள் தப்பித்தவறிக்கூட  அந்தக்கட்சிக்கு  ஒரு ஓட்டு போடுவீர்களேயானால் அது தமிழகத்திலே துரோக வரலாறு படைத்த ஒரு கட்சிக்குநீங்கள் அளிக்கும் வாக்காகத் தான் அது அமையும். ஒரு  சாதியின்பெயரைச்சொல்லி  அவர்கள்வாக்குக்கேட்டு  வந்துகொண்டிருக் கிறார்கள். அதிமுகவினரை பார்த்து சொல்கிறேன், பாமக என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல; டாக்டர் ராமதாஸின் குடும்ப சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அந்த கட்சியிலிருந்த பலர் இப்போது அங்கு இல்லை. அந்த கட்சிக்காக கடைசி வரை பாடுபட்டு குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்த காடுவெட்டி குருவின் மனைவி  சொல்கிறார், என் கணவரை திட்டமிட்டு ராமதாஸ் கொன்றுவிட்டார் என்று. அவரது மகள் சொல்கிறார், எனது தந்தையை கொன்ற,குற்றவாளி ராமதாஸ் என்று. அவரது மகன் மேடைக்குமேடை சொல்கிறார் எனது தந்தையை கொன்றுவிட்டனர் என்று.

 இப்படி அவர்களின் துரோக வரலாறை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். வன்னியர் சங்கம் துவங்கிய காலத்தில் அதற்காக போராடி குண்டர் சட்டத்தில் கைதான பு.தா இளங்கோவன் பாமகவில் தற்போது இல்லை.  பண்ரூட்டி ராமச்சந்திரன் ஒருகாலத்தில் அந்தகட்சியில் இருந்தார். அவர் தான் அந்த கட்சியின் ஒரே எம்.எல்.ஏ வாக இருந்தார். அவரும் அந்த கட்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இவரைப்போன்ற துரோகியைநான் பார்த்ததே கிடையாது எனஅந்தக்கட்சியை விட்டு வெளியேறி னார். யாரெல்லாம் ராமதாஸ் குடும்பத் திற்கு துதிபாடுகிறார்களோ அவர்கள் மட்டுமே பாமகவில் இருக்கமுடியும். 

கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகைமாலியை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேவூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசியதிலிருந்து... 

 

படக்குறிப்பு :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பழனி, மடத்துக்குளம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அந்தந்த மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். பழனியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, பழனி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸை ஆதரித்து சிக்கல் ஊராட்சியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமை தாங்கினார்.  மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம்,திமுக நாகை மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் பி.டி. பகு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

;