election2021

img

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்... மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா பேச்சு...

புதுக்கோட்டை:
திமுக கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்குக் கேட்டுஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்சார்பில் புதன்கிழமையன்று குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்
களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசியது:

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலான எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் அனைத்துப் பகுதிமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிஉள்ளனர். குறிப்பாக பெண்கள் பல வகையிலும் துன்ப துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். முதியோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் தொகை கடுமையாக வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 40 முதல் 50 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. முழுமையான சம்பளம் கிடைப்பதில்லை. சம்பளமும் உரிய காலத்தில் கொடுப்பதில்லை. அடிக்கடி சிலிண்டர் விலையை உயர்த்துவதால் பெண்கள் விறகடுப்பில் சமைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமையில் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களே சம்மந்தப்பட்டுள்ளனர். காவல் துறையில்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஐபிஎஸ் அதிகாரிகளே டிஜிபியிடம் புகார் தெரிவிக்கும் அளவிற்கு பாலியல் சுரண்டல் நடைபெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டு வைத்துள்ள பாஜகவோ சித்தாந்த ரீதியாகவே பெண்களுக்கு எதிரான கட்சி. இப்படிபல வழிகளிலும் பெண்களுக்கு தீங்கிழைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசை தூக்கி எறிவது எனவும், அதிமுக-பாஜகவை தேர்தலில்முற்றிலுமாக துடைத்தெறிவது எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவெடுத்துள் ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்றகூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலக்குழு உறுப்பினர்கள் மல்லிகா, லிங்கராணி, மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;