election2021

img

வென்று காட்ட வந்ததிங்கே தேர்தல் நேரம்...

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா..
திரையிசை மெட்டு

கருப்பும் உண்டு சிவப்பும் உண்டு நீலமும் உண்டு 
மூணும் இப்போ சேர்ந்ததுண்ணு பாடு தோழா
காவிக்கிங்கே இடமில்லை ஓங்கி முழங்கு - அதை
ஆதரிப்போர் அனைவரையும் ஓட்டால் விரட்டு..... (கருப்பும்)

அடிமைகள் ஆட்சியைத் தொடர லாமா-அதை 
முடிவுக்குக் கொண்டுவர தேர்தல் வந்தது 
ஜாடிக்கேத்த மூடியின்னு ஓடி வராங்க-இங்கே
கோடிக்கை சேர்ந்தாலே முடிவு வருமுங்க....(கருப்பும்)

வெள்ளாமை போச்சு கொள்ளையும் ஆச்சு-இங்கு
விளைநிலமெல்லாம் நஞ்சா போச்சு
கொடிபிடித் திங்கே போராட்டம்-அதை
எடுபிடி அரசோ சிறையெடுக்கும்...(கருப்பும்)

நான்குவழி எட்டுவழிச் சாலையின்னும்-உயர்
மின்கோபுரம் அமைக்கப் போறோமின்னும்
மோடி எடப்பாடி ரெண்டு பேருமே-கார்ப்பரேட் 
நாடிநய வஞ்சகம் செய்யும் நிலையே....(கருப்பும்)

நாட்டைக் காக்க போர்புரிய வேண்டுமென்று-இங்கு
நாட்டுப் பற்றைத் துருப்புச் சீட்டாக
எடுக்க விடாதிந்த கூட்டணியே-ஓட்டம்
எடுக்க வேணும் இந்த நாட்டை விட்டே...(கருப்பும்)

பட்டதெல்லாம் போதும் போதுமின்னு-நாட்டில் 
தொட்டதெல்லாம் அழிவில் பார்த்தோமின்னு
ஒட்ட வெட்ட வேணும் விஷச் செடிகள்-ஓட்டில்
திட்டமிட்டுக் காட்டவேணும் நமதணிகள்...(கருப்பும்)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு படித்த பாடம்-அதை
இன்றுவிட்டால் இல்லை வாழ்வு தெரிய வேணும் 
வென்றுகாட்ட வந்த திங்கே தேர்தல்நேரம்-அதை
நன்றுபயன் படுத்தி வெல்ல வேணும்...(கருப்பும்)

கவிதையாளர் : பெரணமல்லூர் சேகரன் 

;