election2021

img

கிராம பகுதியில் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்குச் சேகரிப்பு...

திருப்பரங்குன்றம்:
திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் வெள்ளியன்று வைக்கம் பெரியார் நகர், சாமநத்தம்,விராதனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குச்சேக ரித்தார். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

வாக்குச்சேகரிப்பில்பேசிய பொன்னுத்தாய், “ பணத்திற்கும் பாசத்திற்கும் இடையிலான போராட்டம் தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடக்கிறது. பணத்தின் மூலம் சரிக்கட்ட அதிமுக வேட்பாளர் முயற்சிக்கிறார். அவர் கொடுக்கும் காசை நாளொன்றுக்கு கணக்கிட்டால் ரூ.2-தான் வரும். இரண்டு ரூபாய் பெரிதல்ல. பாசமும், உண்மையான நலத்திட்டங்களும் மக்களை வந்தடைய திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்கள் என்னைவெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றார்.

இலவச சிலிண்டர் என்பது ஒரு மோசடி : பெண் வாக்காளர்கள் கருத்துகிராமப்புற மக்கள் மத்தியில், பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற திமுக-வின் அறிவிப்பிற்கு வரவேற்பு உள்ளது. அதிமுக-வின் ஆறு சிலிண்டர் இலவசம் குறித்துக்கேட்டதற்கு, ஒரு சிலிண்டர் தற்போது 900ரூபாய்க்கு விற்கிறது. மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர். அதில்55 ஆயிரம் பேருக்கு சிலிண்டர் இலவசமாக வழங்குவதாக வைத்துக் கொண்டாலும் மூன்று லட்சத்து 30 ஆயிரம் சிலிண்டர்கள் தேவை. ஒரு சிலிண்டர் ரூ.900. அப்படிப்பார்த்தால் ரூ.29.70 கோடி தேவைப்படும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு  ரூ.29.70  கோடி வீதம் ஐந்து வருடத்திற்கு ரூ.145 கோடி தேவை எனக்கூறிய பெண்கள், இதை நடைமுறைப் படுத்த முடியாது என்றனர்.

அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா “கணக்கில்” வல்லவர். பெண் வாக்காளர்களின் மனக்கணக்கே தலை சுற்றுகிறது.  ஐ,டி.விங்க் மூலம்சிலிண்டர் பயனாளிகளின் எண்ணிக்கை aயை துல்லியமாக கணக்கிட்டுப் பாருங்கள். முதல்வரும் நீங்களும் வாக்கா ளர்களை ஏமாற்றுகிறீர்கள் என்பது புலப்படும். (ந.நி.)

;