election2021

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தோழமை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்....

சென்னை:

திமுக அணியில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வருமாறு:-

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 173 இடங்களிலும், காங்கிரஸ்  25, சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும் கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2, பார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகியவை தலா ஒரு இடம் என மொத்தம் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.இதில் மதிமுக, கொமதேக, மமக (2ல் 1), பார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதிதமிழர் பேரவைக் கட்சி ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி 234 தொகுதிகளில் 187 இடங்களில் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உடன்படிக்கைகளில் திமுக தலைவர்  மற்றும் அந்தந்த கட்சிகளின் தலைவர், பொதுச் செயலாளர் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: பவானிசாகர் (தனி), திருப்பூர் வடக்கு, வால்பாறை (தனி), சிவகங்கை, திருத்துறைபூண்டி (தனி), தளி

மதிமுக: சாத்தூர், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி), பல்லடம், அரியலூர்

முஸ்லீம் லீக்: கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி: சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு

மனித நேய மக்கள் கட்சி: பாபநாசம், மணப்பாறை

மக்கள் விடுதலைக் கட்சி :  நிலக்கோட்டை (தனி), 

ஆதி தமிழர் பேரவை : அவிநாசி (தனி), 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி : பண்ருட்டி, 

பார்வர்ட் பிளாக் : உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

;