election2021

img

‘எங்களை நலம் விசாரிக்க வாராரு எங்க மாலி தோழரு’

கீழ்வேளூர்:
கீழ்வேளூர் தொகுதியையும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் நாகைமாலியையும் அவ்வளவு எளிதாய் பிரித்து பார்க்க முடியாது. தொகுதி உருவான முதல் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினராக திறம்படபணியாற்றி தொகுதிக்குள் ஒவ்வொரு கட்டமைப்புகளையும்  புதிதாய் உருவாக்கியவர். தனது பதவிக்காலத்தில் செய்தபணிகளை நான்காண்டுகள் நிறைவடைந்த உடன் பட்டியலிட்டு “நாகைமாலியின் நான்காண்டுகள் பணிகளும்-பதிவுகளும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு ஒவ்வொரு வாக்காளர்களின் கைகளிலும் தந்து கம்பீரமாய் நின்றவர். 89 ஊராட்சிகளையும், 2 பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் தோழர் நாகைமாலிதான் கட்டி இருக்கிறார். 

பள்ளிக் கட்டிடங்கள், சார்நிலை கருவூலம், பொது நூலகக் கட்டிடங்கள்,அங்கன்வாடி மையக்கட்டிடங்கள், பேருந்து நிறுத்தங்கள், வெள்ளம் மற்றும் கடல் நீர் உட்புகா தடுப்புச்சுவர்கள், பொதுக் கழிப்பறைகள் கிராமப் புறச் சாலைகள் என புதிதாக ஒரு நகரை உருவாக்குவது போன்று தன் பதவிக்காலத்தில் ஓய்வின்றி கீழ்வேளூ ரை உருவாக்கியவர்.உறவு பாலங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அடித்தட்டு மக்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவு செய்த சட்டமன்ற உறுப்பினர்களில் முதல் வரிசையில் இருப்பவர். தொகுதிமுழுவதும் 17 பாலங்களை தரமாய் கட்டியதன் மூலம் தொலை தூரங்களை குறைத்து கிராமங்களை சில நிமிடங்களில் சென்றடைய வழிவகுத்திருக் கிறார். பல ஆண்டுகாலம் சாலைகளையே பார்த்திராத பகுதிகளில் தார்ச்சாலைகளை உருவாக்கி இருக்கிறார். குடிநீர் பற்றாக்குறையை போக்கியவர்,சூரிய மின் விளக்கு மற்றும் மின் கம்பங்கள் தேவையை பூர்த்தி செய்து, மின் தடங்களை புதிதாக அமைத்து பல கிராமங்களின் இருளை போக்கியவர். 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செழுமைப்படுத்தியவர் என பலஅடையாளங்களை கொண்ட தோழர்நாகைமாலி தங்களிடம் தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர் அல்ல. எந்நேரமும் எங்களின் நலனுக்காக வீதிகளில் இறங்கி போராடுபவர் என பொதுமக்கள் மனதார வாழ்த்துவ தோடு, ‘எங்களை நலம் விசாரிக்க வந்திருக்காரு’ என்று வயதான முதியவர்கள் மனம் குளிர்ந்து உற்சாகமடை கின்றனர்.ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம எல்லையிலேயே ஒட்டுமொத்த மக்களும் கைக்குழந்தைகளை தூங்கிக்கொண்டு, தள்ளாடும் முதியவர்களை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு கூடி நின்று  ஒவ்வொரு வீட்டின் வாசல்களில் கோலமிட்டு அதுவும் தங்களை பாதுகாக்கும் அரிவாள், சுத்தியல், நட்சத்திரத்தை வரைந்து வரவேற்கும் காட்சிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் நடந்து வருகிறது. தொகுதி முழுவதும் மக்கள் திரண்டு நின்று ஆதரித்து வெற்றி முழக்கமிடுவது ஒவ்வொரு செயல்வீரர்களின் தெம்பையும் அதிகரிக்க செய்கிறது.

பூவைத்தடி கிராமத்தில் நூறுநாள் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த வேட்பாளர் நாகைமாலியை பார்த்த வயதான ஒருவர் “நீங்கதான் ஜெயிச்சுட்டீங்கல தோழர், ஆபிசுக்கு போய் ஓய்வெடுங்க” என்று நடந்தபடியே கூறிச்செல்லும் முதியவரின் வாய்ச்சொல் நிச்சயம் பலித்து விடும்.

செ.ஜான்சன்

;