election2021

img

காமெடி பீசும்... கிரிமினல் அமைச்சரும்....

திருமங்கலம்:
மத்திய அரசுக்கே தெரியாமல் திருட்டுத் தனமாக டெண்டர் விட்டு கோடி கோடியாக கொள்ளையடித்தவர் தான் அதிமுக அரசின் வருவாய்த் துறைஅமைச்சர் உதயகுமார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திருமங்கலத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாபெரும் பிரச்சாரகூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:இந்த மதுரைக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கிறது. ஆனால் ஒருஅசிங்கமும் இருக்கிறது. அந்த அசிங்கத்தின் அடையாளம்தான் செல்லூர்ராஜூ - உதயகுமார் - ராஜன் செல்லப்பா.இந்த மூன்று பேருக்குள்ளும் கோஷ்டிதகராறுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் இந்த மதுரை மாவட்டத் தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்.உதயகுமார் ஒரு கிரிமினல் அமைச்சர். அது எப்படி என்றால் ஜெயலலிதாவே உதயகுமாரிடமிருந்து மந்திரி பதவியை பறித்தவர். அதன்பிறகு சசிகலா காலில் விழுந்து விழுந்து அந்த பதவியை வாங்கி னார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக உட்கார வைத் தார்கள். அந்த ஓ.பி.எஸ்.க்கு துரோகம் செய்து சின்னம்மா தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொன்னவர் இவர்தான்.சின்னம்மா ஜெயிலுக்குப் போன பிறகு பழனிசாமி தான் முதலமைச்சர் என்று சொன்னார். எவ்வளவு துரோகம் என்று பாருங்கள். வருவாய்த்துறை அமைச்சராக இருந்து தன்னுடைய வருவாயைத் பெருக்கிக் கொண்டாரே தவிர வருவாய்த் துறையை நல்ல முறையில் காப்பாற்றி, மக்களுக்கு பணியாற்றினாரா?
திருமங்கலத்திற்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்குவேன் என்று சொன்னார். வந்ததா? விமானநிலையம் செல்லும் பாதையில் இரயில்வே மேம்பாலம் வந்ததா?பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினாரா? திருமங்கலம் பிரதான கால்வாய் தூர்வாரப்பட்டதா? உச்சப்பட்டி தோப்பூர் பகுதி துணைக் கோள் நகரமாக மாற்றப்பட்டதா? புதிய தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? இவ்வாறு எதையும் செய்யாதவர். அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு கோயில் கட்டினார். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மட்டுமல்ல. அவர் சட்ட மன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா உட்கார்ந் திருக்கும் போது செருப்பு போடாமல் இருந்தவர். மகா நடிகர் அவர். ஏனென்றால் அவர்அம்மாவை கடவுள் மாதிரி நினைத் தாராம். அவ்வாறு நடித்தவர், அந்தஅம்மாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து வெளியில் சொன்னாரா? விசா ரணை கமிஷன் அமைக்கப்பட்டு 4 வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் செய்திவரவில்லை.மதுரை மாவட்டத்தையே இந்த 3 பேரும் சேர்ந்து, போட்டி போட்டுக்கொண்டு குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிறார்கள். மதுரையை இன்றைக்கு மண்ணாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஊழல் உதயகுமார்!
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இருக்கிறாரே, அவர் செய்திருக்கும் பல கோடி ரூபாய் ஊழல் என்னஎன்பது உங்களுக்கு தெரியும்.பாரத் நெட் டெண்டர் ஊழல். இது மத்திய அரசின் திட்டம். அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதிகள் தருவதற்கான ஒரு திட்டம். அதில் பயங்கரமான ஊழல் நடந்திருக்கிறது. டெண்டர்விடுவதில் ஊழல் நடக்கிறது என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம்கண்டு பிடித்து, அறப்போர் இயக்கமும்அதை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் இன்னும் டெண்டரே விடவில்லை என்று ஒரு செய்தியை சொன் னார். சரி என்று பொறுத்திருந்தோம். அவருக்கு வேண்டியவருக்கு கொடுக்கவேண்டும். அதன் மூலமாக 5,000 கோடிரூபாய் லஞ்சம் வாங்க வேண்டும் என்பதற்காக டெண்டர் விதிமுறைகளை மாற்றி, அதை கொடுப்பதற் கான முயற்சியில் ஈடுபட்ட போது, அதைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு சென்ற போது,நீதிமன்றத்தில் டெண்டர் போடவில்லை என்று சொன்னார்கள்.அதற்கு பிறகு திடீரென்று அதற்கு மத்திய அரசு தடை போட்டது. அதை விசாரித்தால் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக டெண்டர் விட்டிருக் கிறார்கள். இது மத்திய அரசுக்கு தெரிந்து, அதை நிறுத்தியது. இதைவிட கேவலம் இந்த ஆட்சிக்கு தேவையா?இவ்வாறு அவர் பேசினார்.

;