election2021

img

அரூர் தொகுதி... ஏ.குமாருக்கு பெருகும் ஆதரவு....

அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.குமாருக்கு தொகுதியில் ஆதரவு அலை உயர்ந்து அடிக்கிறது. 2016 முதல் 2021க்குள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.ஆர்.முருகன் தற்போது அமமுகவிலும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சம்பத்குமார் அதிமுகவிலும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நாள் நெருங்க, நெருங்க இவர்களுக்கு அரூர் தொகுதி மக்கள் “அரோகரா” போட தயாராகி விட்டனர்.

அதிமுக ஆட்சியில் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அரசின் சார்பில் ஏதும் செய்யாத சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களாக இருந்தஇவர்கள் இருவரும் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், சாலைவசதிகளைக்கூட ஏற்படுத்தாதது இப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு அலையை உருவாக்கி உள்ளது. தேர்தல் கடலுக்கு உள்ளேகூட இவர்களுக்கு ஆதரவான அலைஎழும்பவில்லை.

இந்நிலையில் “பண மூட்டை களை நம்பி களம் இறங்கியுள்ள அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை வீழ்த்துவதுதான் என் முதல் பணி, நான் வெற்றி பெறுவது இரண்டாவதுதான்” என தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிமுக உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் தனக்கு நெருக்கமாக இருக்கும் இரட்டை இலை விசுவாசிகளின் வாக்குகளை கலைத்து வருகிறார். ஆனால் பாவம்; கிராமப்புறங்களில்கூட தனது குக்கர் விசிலடிக்காது என்பதும், இருவருக்குமே ஆதரவு குறைந்து வருகிறது என்பதும் அவருக்கே தெரிந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. 

பெயரில்லாத இலை...
தொகுதி மக்கள் இலை வேட்பா ளருக்கும், குக்கர் வேட்பாளருக்கும் அரோகரா போட தயாராகிவிட்ட சூழல் நன்றாக தெரிகிறது. தொகுதி மக்களின் எதிர்ப்புணர்வை அறிந்த சம்பத்குமார் கிராமப்புற சுவர் விளம்பரங்களில் அவரது பெயரை போட்டால் வாக்காளர்களின் ஆத்திரம் அதிகமாகும் என பெயர் இல்லாமல் வெறும் இரட்டை இலை சின்னத்தை மட்டுமே வரைந்து வைத்துள் ளது இதற்கான சாட்சியாகஉள்ளது.இச்சூழலில் மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அரூர் ஒன்றியம் பட்டுகோணம்பட்டி, கொக்கராப்பட்டி, பேதாதம்பட்டி, அச்சல்வாடி,கீரைப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரு டன் வாக்கு சேகரித்தார். சிபிஎம் நிர்வாகிகள் ஏ.டி.கண்ணன், ஒன்றிய செயலாளர் வி.வஞ்சி, ஆர்.மல்லிகா, திமுகபாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், அரூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சௌந்தர ராஜன், ஊராட்சிக்குழு தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் காசி.தமிழ்குமரன், ஒன்றிய செயலாளர் அல்லி முத்து, பொருளாளர் செங்கொடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழனி, காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் பூபதி, கொங்கு மக்கள் கட்சிஒன்றிய செயலாளர் கவியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

வி.சாமிநாதன்
 

;