election2021

img

வைப்புத் தொகை வழங்கிய ஓர் எளிய தோழர்...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவில்பட்டி  தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  கே.சீனிவாசன்  வெற்றி பெறுவதற்கு   கட்சியின் கோவில்பட்டி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னணி ஊழியர் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் கோவில்பட்டியில் பூக்கடை நடத்திவரும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் தங்கவேல் பத்தாயிரம் ரூபாய் வைப்புத்தொகையாக வழங்கினார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநிலக்குழு  உறுப்பினர் ஆர் மல்லிகா, நகரச்செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;