election2021

img

கேரள சட்டமன்ற  தேர்தல் .... தோல்வி பயம் காரணமாக பாஜக தலைவர் சுரேந்திரன் 2 தொகுதிகளில் போட்டி....  

திருவனந்தபுரம்
தமிழகத்தை போலவே கேரளத்திலும் சட்டமன்ற தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. அங்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் இடது ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக என மூன்று அணிகள் களமிறங்கியுள்ளதால் கேரளத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. 

இடதுசாரி அணி ஏற்கெனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், பெயரளவிற்கு களமிறங்கும் பாஜக கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக  115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ளார். 

தோல்வி பயம் காரணமாக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மன்ஜேஷ்வர் மற்றும் கொன்னி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும், நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியிலும், முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் நேமம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
 

;