election2021

img

மோடி, அமித் ஷா பிரச்சாரத்திற்கும் தடை விதிக்க வேண்டும்..... தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை....

திஸ்பூர்:
போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரியை மிரட்டும் வகையில் பேசிய அசாம் மாநில பாஜக தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 48 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. (பின்னர் அது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டது) 

இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு தடை விதித்தது போல, பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா, பாஜகதேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட் டோருக்கும் தடை விதிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மேலும் கூறியிருப்பதாவது:

“அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரம் செய்ய 48 மணி நேரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தலில் பாஜகதோல்வியடைந்து விட்டதையே இதுகாட்டுகிறது. பாஜகவின் சதிச் செயல்கள்வெற்றிபெறாது. பாஜக-தான் வெற்றிபெறும் என்று விளம்பரங்களை வெளியிட்ட இதழ்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டு உள்ளது. எனினும், அசாம் செய்தி இதழ்களில் நரேந்திர மோடி, அமித்ஷா, சர்பானந்த சோனோவால், ஜே.பி. நட்டாஆகியோரின் படங்கள் அடங்கிய விளம் பரங்கள் வெளியாகவே செய்தன. அசாமில்சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமெனில் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். பாஜகவேட்பாளர் வாகனத்தில் வாக்கு இயந் திரங்கள் இருந்தது பற்றி விசாரணை நடத்தவேண்டும்.  பாஜக தலைவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் நியாயமாக நடைபெறுகிறது என்பதை நிரூபிக்க முடியாது.இவ்வாறு சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

அசாம் சட்டமன்றத் தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் இடதுசாரிகள். போடோலாந்து மக்கள் முன்னணிஉள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறப் போவது உறுதிஎன்றும் அவர் கூறியுள்ளார்.

;