election2021

img

அசாம் பாஜக அமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை... போடோலாந்து கட்சித் தலைவரை மிரட்டிய விவகாரம்

புதுதில்லி:
அசாம் மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய போடோலாந்து மக்கள் முன்னணி, தற்போதுகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘ஆயுதகிளர்ச்சிக் குழுத் தலைவர் படாவை தொடர்ந்து ஊக்குவித்தால் உங்களை சிறையில் தள்ளி ஒடுக்குவேன்’ என்று போடோலாந்து மக்கள்முன்னணி கட்சித் தலைவர் ஹக் ராமா மொஹிலாரிக்கு, தேர்தல் பிரச்சாரத்தின்போது மிரட்டல் விடுத்தார்.‘தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடுவேன்’ என்று அச்சுறுத்தி இருந்தார்.

இது போடோலாந்து மக்கள் முன் னணி தலைவரை மிரட்டி அவரின் பிரச்சாரத்தை முடக்கும் முயற்சி என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் ஆணையமும் சர்மாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.இந்நிலையிலேயே, ஹிமந்தபிஸ்வா சர்மாவின் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ‘ஹிமந்த பிஸ்வா பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பிரச்சாரம்ஆகியவற்றில் ஈடுபட 48 மணி நேரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று வெள்ளியன்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

;