election2021

பிருந்தா காரத் அறைகூவல்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...

 1ஆம் பக்கத் தொடர்ச்சி... 

அரசு மக்களை கண்டுகொள்ளவில்லை. 12 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழியின்றி, வேலையின்றி வீதிகளில் அலைந்துதிரிந்தார்கள். ஆனால், பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகியுள்ளனர். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடப்பு பட்ஜெட்டில் விதவைத்தாய்மார்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, ஏழை-எளிய மக்களுக்கு, மூத்தகுடிமக்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில்  பெட்ரோலியப் பொருட்களின் மீது ரூ.2.98 லட்சம் கோடி வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை-எளிய மக்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.

மத்திய அரசு உழைப்பாளி மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தை ஜேப்படி செய்கிறது. இந்த ஜேப்படி (பிக்பாக்கெட்) கூட்டத்திற்கு தமிழகத்தின் இரட்டையர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் தலையாட்டுகின்றனர். மத்தியில் நடைபெறும் ஜேப்படி அரசிற்கு இவர்கள் தலையாட்டி பொம்மைகள். கடந்த ஐந்தாண்டுகளாக வெட்ககரமான ஆட்சியை அடிமைச் சேவகம் புரியும் அரசைத் தான் தமிழகம் கண்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக திமுக, இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்றன.  நாட்டின்பொதுத்துறைகளான  வங்கி, இன்சூரன்ஸ் துறைகளை விற்பதற்கு எதிராக, நாட்டையேகூறுபோடுவதற்கு எதிராகப் போராடிவருகின்றனர். ஆனால் அதிமுக மட்டும் அதற்குஆதரவாக உள்ளது.தமிழகத்தில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஐந்தாண்டுகளாக ஆட்சிசெய்த எடப்பாடி அரசு ஏன் அவற்றை நிரப்பவில்லை? மோடி ஆட்சியில் எந்தத்தொழிற்சாலையும் உருப்படியாக இயங்கவில்லை. மோடி-அமித்ஷாவின் பொய்களைஉற்பத்தி செய்யும் ஆலை மட்டுமே இயங்கிவருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகளின் வற்புறுத்தலால் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக 48 நாட்கள்தான் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே ஹரியானா மாநிலத்தில் தான் வேலையிமை அதிகரித்துள்ளது. அங்கு 26 சதவீதம் பேருக்கு வேலையில்லை. அங்கு மோடி-அமித்ஷா ஆசியோடு கட்டார் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இமாச்சலப்பிரதேசம், பீகார், திரிபுரா  மாநிலங்களிலும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. பாஜக ஆட்சி நடக்கிற இந்த மாநிலங்களுக்குச் சென்று புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்காத மோடியும்-அமித்ஷா-வும் தமிழகத்திற்கு வந்து 50லட்சம் வேலை தரப்போவதாக பொய் பேசுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

பிருந்தாகாரத்தின் ஆங்கில உரையை தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார். முன்னதாக வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார்.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 

;