election-2019

8 வழிச்சாலை--எடப்பாடி, ராமதாஸ் கள்ள மவுனம்

சேலம், ஏப்.14-சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமகநிறுவனர் ராமதாஸ் ஆகியோரோடு ஞாயிறன்றுபிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் கலந்துகொண்டார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்காரி.2014 ஆம் ஆண்டு முதலே எடப்பாடிக்கு மிகவும்நெருக்கமானவர் கட்காரி. இந்த நெருக்கத்தின் விளைவாகத்தான் சேலம் சென்னை எட்டு வழிச் சாலைக்கு எடப் பாடியின் வேண்டுகோளை ஏற்று பத்தாயிரம் கோடிரூபாய்க்கு மேல் ஒதுக்கி யிருக்கிறார் கட்காரி. பாஜகவுக்காக தமிழகம் வந்த கட்காரியை தனக்காக ஒரு மேடையேற வேண்டும் என்று வற்புறுத்தி சேலத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் எடப்பாடி.சில நாட்களுக்கு முன்பு எட்டு வழிச் சாலைக்கான நிலகையகப்படுத்தும் அர சாணையை ரத்து செய்ததுசென்னை உயர் நீதிமன்றம். இது எட்டுவழிச் சாலை எதிர்ப்போரின் வெற்றியாகக் கருதப்பட்டது.இந்தத் தீர்ப்பை பற்றி பிரச்சாரங்களில் பேசாத எடப்பாடி பழனிசாமி, ‘எட்டு வழிச் சாலை திட்டம்பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை’என்று பேட்டி அளித்தார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வரவேற்றுக் கொண்டாடினர்.ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஞாயிறன்று எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டே, ‘விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி குறிப்பிட்ட காலத்துக்குள் எட்டு வழிச்சாலை திட்டம் முடிக்கப் படும்’ என்று கட்காரி அறி வித்துவிட்டார்.ஏற்கனவே நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீட் தேர்வுகளை ரத்து செய்ய கோரவில்லை; தமிழில் எழுதவேண்டுமென்றுதான் கோரிக்கை வைத்திருக் கிறார்கள் என்று பியூஷ் கோயல் சொன்னார். இப்போது எட்டுவழிச் சாலைதிட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று நிதின் கட்காரி சொல்லியிருக் கிறார். எடப்பாடியும், ராமதாசும் கள்ள மவுனம் காக்கின்றனர்.

;