election-2019

img

மக்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் களத்துக்கு வருவது கம்யூனிஸ்ட்டுகளே! திரைக்கலைஞர் ரோகிணி

திரைக்கலைஞராக இருக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் நிறைய விசயங்களைக் கொண்டுசெல்ல முடியும் என்று முடிவெடுத்து சில வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம். அப்படி செல்லும்போதுதான் மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். சுத்தமான காற்று வேண்டும் என்பதற்காக போராட வந்த 17 வயது இளம்பெண் ஸ்னோலின் உள்ளிட்டவர்களை சுட்டுக்கொன்றதை எப்படி மறக்க முடியும்? சிறுபான்மை சமூகத்தில் பிறந்தார் என்பதைத் தவிர ஆஷிபா என்ற சிறுமி செய்த குற்றம் என்ன?” இப்படி கேள்விகள் ஏராளமாய் நம்மைத் துரத்துகின்றன.எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத 600-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள், கலைஞர்கள், நாடகவியலாளர்கள் சேர்ந்து ‘மோடி அரசு எங்களுக்கு வேண்டாம்’, என்று அறிக்கை விடுத்துள்ளோம். இத்தகைய சூழ்நிலை வந்தது எப்படி? பாஜகவுக்கு எதிராகப் பேசினால் மிரட்டுவார்களாம். அப்புறம் கொலையும் செய்வார்களாம். கவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற எழுத்தாளர்களை, கலைஞர்களை படுகொலை செய்யும் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். சு.வெங்கடேசன் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதற்காக நானாக வந்து வாக்கு சேகரித்தேன். அந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்களைப் பார்த்து வெறுத்துப்போய் இருக்கிறோம்.மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலில் களத்திற்கு வந்து நிற்பது கம்யூனிஸ்ட்டுகளே! கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் பக்கம் நிற்கிறார்கள். கலைஞர்களாகிய நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பக்கம் நிற்கிறோம். கடந்த 2015 சென்னை பெருவெள்ளத்தின் போது கம்யூனிஸ்ட்டுகளின் களப்பணியை நேரடியாகப் பார்த்துள்ளேன். அவர்கள் உறுதுணையாக இருந்ததால்தான் எங்களால் நிறைய வேலைகளைச் செய்ய முடிந்தது. சேற்றில் நடந்து நடந்து அவர்களின் கால்கள் புண்ணாகிவிட்டது. மக்கள் துயரப்படும்போது கலைஞர்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நாங்கள் செய்யும் வேலையில் ஒரு அறம் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். மதுரை தொகுதிக்கு சு.வெங்கடேசன் வேட்பாளர் என்று அறிவித்தவுடனேயே துள்ளிக்குதித்துவிட்டேன். மதுரையில் பல்வேறு குளங்கள் மிகவும் பாழ்பட்டுக்கிடக்கிறது. அவர் வெற்றிபெற்றதும் அந்தக் குளங்களைப் பராமரித்து மக்கள் பயன்படுத்த வழிவகுப்பார் என நம்புகிறேன். சு.வெங்கடேசனை வெற்றிபெறச் செய்வது மதுரை மக்களின் கடமை என்றார்.

;