election-2019

நான் கேட்கின்றேன்...நரேந்திர மோடி என்றால் தனிப்பட்ட மோடியை குறிப்பிடுவது அல்ல

நான் மீண்டும் சொல்லுகின்றேன். நரேந்திர மோடி என்றால் தனிப்பட்ட மோடியை குறிப்பிடுவது அல்ல, அவர் ஏற்றுக்கொண்ட தத்துவம் நமக்கு எதிரி, அந்த மோடியோடு சேர்ந்து இருக்கக்கூடிய அனைவரும் நமக்கு எதிரிகள் தான். இந்தியாவை வளர்த்து விட்டார் மோடி என்று கொக்கரிக்கிறார்கள். இவரிடம் தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். இது மிக மிக மோசமான ஒரு பொய். கிராமத்தில் ஒரு பழமொழியை வேடிக்கையாகச் சொல்வார்கள் "பொய்யைச் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா" என்று, அதுபோல் இந்தியாவை அவர் வளர்த்து விட்டார் என்று பொய் சொல்லுகிறார்கள். இந்தியாவிற்கே அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என்று கடைந்தெடுத்த வடிகட்டிய பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.நான் கேட்கின்றேன், உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 103 வது இடத்தில் இருக்கின்றது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவிற்கு 140 வது இடம். மனிதவள மேம்பாட்டு தர வரிசையில் இந்தியாவிற்கு 130வது இடம். இளைஞர்கள் தரவரிசையில் இந்தியாவிற்கு 134வது இடம். வேலைவாய்ப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 103வது இடம். பத்திரிகை சுதந்திரம் உலக நாடுகளில் இந்தியாவிற்கு 138வது இடம். அமைதியான உலக நாடுகளில் இந்தியாவிற்கு 136வது இடம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 177வது இடம். வேலைவாய்ப்பு என்பது 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கின்றது. ஜி.டி.பி எனப்படும் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது. இவை அனைத்தும் பல்வேறு அமைப்புகள் மூலமாக கிடைத்திருக்கக்கூடிய புள்ளிவிபரத் தகவல்கள். நான் கேட்கின்றேன் இந்தியா வளர்ந்து இருக்கின்றதா? 

;