election-2019

எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை!

தமிழக அரசாங்கத்தின் கடன் 4 இலட்சம் கோடியை தாண்டி விட்டது என்பதை தமிழக மக்கள் அறிவர். எடப்பாடி ஆட்சியின் பொழுது மட்டும்கடன் 1.45லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இந்தியாவில் மிக அதிக கடன் உள்ளமாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.இந்த சூழலில் வருவாயை பெருக்கும்ஒவ்வொரு நடவடிக்கையும் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் எடப்பாடி அரசாங்கம் மாநிலத்திற்கு வர வேண்டிய வருவாயை கூட சரியாக வசூல் செய்யாமல் இழப்பை சந்தித்துள்ளது என்பதை தலைமை தணிக்கையாளர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவற்றில் சில:


w 2016-17ம் ஆண்டு முறையான வணிக வரி/வாகன வரி/ பத்திரபதிவு வரி முதலியன வசூல் செய்யாததால் மாநிலம் 

ரூ. 6471 கோடி இழந்துள்ளது.


w பெட்ரோலிய பொருட்களுக்கு முறையான வரி வசூல் செய்யாததால் ரூ. 1893 கோடி இழப்பு.


w தமிழக அரசின் பல்வேறு துறைகள் வரியை குறைத்து மதிப்பிட்டதால் இழப்பு - ரூ. 2457 கோடி.


w வரி ஏய்ப்பு வழக்குகளை துரிதமாக நடத்த தவறியதாலும் சொத்துக்களை ஜப்தி செய்ய தவறியதாலும் இழப்பு ரூ.1840 கோடி.


w முத்திரை தாள் பதிவு கட்டணம் முறையாக வசூல் செய்யாததால் இழப்பு ரூ.876 கோடி.


w கனிமவள சுரங்கங்களிலிருந்து சரியான தீர்வை பெறாத காரணத்தால் இழப்பு ரூ.59 கோடி.


இந்த வரி மற்றும் வருவாய் வசூலிக்காமல் இருக்க பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் என்பதை கூறத்தேவை இல்லை.தமிழகத்தின் நிதி நிலைமையை சீர்குலைத்த எடப்பாடி அரசாங்கத்தையும் மோடி அரசாங்கத்தையும் வீழ்த்துவது தமிழக மக்களின் முக்கியமான பணி என்றால் மிகை அல்ல!


விவரங்கள் தலைமை தணிக்கையாளர் அறிக்கை 2/2018


அ.அன்வர் உசேன்