திண்டுக்கல்,ஏப்.1
திண்டுக்கல்லில் மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக மீண்டும் மீண்டும் ஆப்பிள் சின்னத்திற்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜோதி முத்து போட்டியிடுகிறார் அவருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரங்களில் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் சமீபத்தில் கன்னிவாடியில் பிரச்சாரம் செய்தார் இந்நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது அதனையொட்டி திண்டுக்கல் அனுமந்த நகரில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி பாளையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் மீண்டும் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.மேலும்
ஸ்டாலின் மகன் கருணாநிதி
இதனால் அதிமுக மற்றும் பாமக பாஜக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் கருணாநிதி மகன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக ஸ்டாலின் மகன் கருணாநிதி என்று உளறி கொட்டினார
சுயேட்சை வேட்பாளர் மகிழ்ச்சி
திண்டுக்கல் தொகுதியில் ஏற்கனவே ஆப்பிள் சின்னத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளர் இருதயசாமி என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது ஆப்பிள் சின்னத்திற்கு அதிமுக அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பது மகிழ்ச்சியை தருவதாக மகிழ்ச்சியடைகிறார்.