மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் அத்துமீறி உள்ளேநுழைந்தவர்கள் மீதும், தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி. திமுக சார்பில்அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் சார்பில் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தோழமைக் கட்சியினர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல்அதிகாரியை நேரில் சந்தித்து புகார் கடிதம் அளித்தனர்.
பெறுநர்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி,
இந்தியத் தேர்தல் ஆணையம்,
பொது (தேர்தல்) துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
வணக்கம்.
பொருள்:- மதுரை நாடாளுமன்றத் தொகுதி - வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் அனுமதியின்றி உள்ளேநுழைந்தது - ஆவணங்கள் வைக்கப்பட்ட அறை முத்திரையிடப்படாமல் இருந்தது - உரிய விசாரணை, நடவடிக்கைகள் எடுக்ககோருதல் தொடர்பாக;
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரிவளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று(20.4.2019) மாலை சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியர் அந்த வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள்மூன்று மணி நேரமாக இருந்திருக்கிறார். அவரோடு வேறு மூன்று நபர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் அடையாளஅட்டையும் இல்லை. காவல்துறை அவர்களை மூன்று மணி நேரத்திற்கு பின்பே கண்டுபிடித்து தடுத்து வைத்திருக்கிறது. மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ளமுயற்சித்து முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் சு. வெங்கடேசன் நீண்ட நேரம் போராடியபிறகும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரவில்லை. பின்னிரவு 12.30 மணிக்கு பிறகுமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போது வேட்பாளர் இந்த விசயம் குறித்துதெரிவித்த பிறகு தான் தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. இந்நிலையில் தபால் வாக்குகளில்முறைகேடுகள் செய்வதற்கான முயற்சியாகவே இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே,
1. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார்?.
2. சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும், அறையை திறப்பதற்கும்ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தரவிட்டவர்கள் யார்?. யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர்யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன?.
3. மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வதும், அதை மூன்று மணி நேரம் வரைகாவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் எப்படி? ஆகிய கேள்விகள் முக்கியமானவை.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்கவாய்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் சு. வெங்கடேசன் சொன்னபிறகு தான் இந்த பிரச்சனையே தனக்கு தெரியும் என்று சொன்னதும் ஆச்சரியமளிக்கிறது.
எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென கோருகிறோம்:
1. நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
2. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்கவேண்டும்.
4. மதுரை நாடாளுமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளமையங்களுக்கு முழுiமான துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்.
5. தபால் வாக்குகள் விநியோகம், பதிவு, எண்ணிக்கை ஆகியவை குறித்து சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டுமெனகேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே, தாங்கள் இந்தகோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தங்களன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
(ஆர்.எஸ். பாரதி எம்.பி.)
(இரா. முத்தரசன்)
(தொல். திருமாவளவன்)
இதனை தங்களின் மேலான பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தி வெளியிட வேண்டுகிறோம்.
- வெ. ராஜசேகரன்
அலுவலகச் செயலாளர்
Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017
Ph.: 044 + 24326800 / 900
Fax: 044 + 24341294