தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாலை 3 மணிக்குமேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக திமுக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு விடம் புகார் அளித்துள்ளனர். அதிமுகவின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஏற்ப மாலை 3 மணிக்கு மேல் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.கிரிராஜன் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.