சென்னை, ஏப். 6-கல்வித் துறையை, ஆராய்ச்சித் துறையை சீரழித்த பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண் டும் என கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் அறைகூவல் விடுத்துள்ளனர்.சென்னையில் சனிக்கிழமை(ஏப்.6) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் துணை வேந்தர்கள் வசந்திதேவி, சாதிக், ம.ராசேந்திரன், பேராசியர் என்.மணி ஆகியோர் கூறுகையில், “யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சந்திப்பு” என்றனர்.ஜனநாயக, கூட்டாச்சி தத்துவத்தை இந்தியா பாதுக்காக்கக் கூடிய நாடாக இருக்க வேண்டுமா அல்லது ஒற்றைத் தலைமையை கொண்ட நாடாக மாற வேண்டுமா என்பதுதான் தற்போது எழுந்திருக் கும் பெரும் பிரச்சனையாகும். கடந்த 5 வருடங்களாக அபாய சங்கு ஒளித்துக்கொண்டே இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தனர்.உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் சாதாரண உழைப்பாளி மக்களின் வரிப் பணத்தில்தான் செயல்படுகிறது. பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உயர் கல்வி நிலையங்களிலும் அறிவுத் தளத்திலும்தான் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக பல் வேறு விதமான வளமையான சிந்தனைகளும் சித்தாந்தங்களும் உருவாகின. ஆனால், இதற்கு நேர்மாறாக அச்சம் குடிகொண்டுள்ள இடங்களாக இவை இப்போது மாறி வருகின்றன. இதன் விளைவாக கேள்வி கேட்கும் மனப்பாங்கும் எதையும் விமர்சனப்பூர்வமாக அணுகும் ஆய்வுமுறையும் குறைந்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டினர்.இந்திய நாட்டின் பன்முகத் தன்மை, மதச்சார்பின்மை ஆகிய மாண்புகளை அழிக்க, அனுமதிக்க முடியாத உளவியல் அச்சுறுத்தல் முதல் உடலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் வரை பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன. தில்லி, ராஜஸ்தான், சண்டிகர், அலகாபாத், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள் ளிட்ட பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங்களில் தேசியம் என்ற பெயரில் மதச் சிறுபான்மையினர் தலித்துகள் மற்றும் பெண்கள் மீது வன் கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. நடுநிலையாளர்கள் வருந்தத்தக்க வகையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஆதரவின் பெயரிலும் தூண்டுதலின் பெயரிலும் இவை நிகழ்த்தப் படுகின்றன.
மேலும், பல்வேறு உயர் ஆராய்ச்சி நிறுவனங்களின் அடிப்படைத் தன்மையையே மாற்றும் வகையில் தகுதி குறைந்தவர்களைத் தலைவர்களாக நியமித்தல், மூடநம் பிக்கை மலிந்தோருக்குப் பதவி உயர்வு வழங்குதல், அறிவு வளர்ச் சிக்கு நிதியைக் குறைத்தல் போன்ற மறைமுகமான செயல்களிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை, சித் தாந்தங்களை உண்மை போன்று காட்டவும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினர்.சமூக அக்கறை உள்ள கல்வியாளர்களாகிய நாங்கள் இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் கல்வி கற்றவர்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். இந்திய உயர் கல்வி முறை, அதற்கே உரிய அறிவியல் ஆய்வுமுறையிலும் விமர்சனப்பூர்வமான அணுகு முறையிலும் தொடர வேண் டும் என்று விரும்புகிறோம். இத்தகைய அமைப்பு முறையே தேச விரோதம் எனச் சித்தரிப்பவரை, இந்த அமைப்பு முறையின் மீதே அதிருப்தி தெரிவிப்பவர்களை நாங்கள் அனுமதியோம்.
அதன் முதல் படியாக வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங் களை உயர்த்திப் பிடிக்கும் அரசாக அமைய உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத் தின்படி தன்னாட்சியுடைய மதச்சார் பற்ற சமூக சமத்துவமான ஜனநாயகக் குடியரசாகத் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். கடந்த பல வருடங்களாக வலிமை பெற்று, அணிதிரண்டுள்ள பிற் போக்கு சக்திகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கின்றன. எனவே பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். முன்னதாக கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் என 60க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட அறிக்கையை வெளியிட்டனர்.இச்சந்திப்பின் போது பொருளாதார நிபுணர் சிறீதர், முன்னாள் பேராசியர்கள் பி.ராஜமாணிக்கம், டி.ஆர்.கோவிந்தராஜன், எஸ்.ஜனகராஜ், எஸ்.சங்கரலிங்கம், பி.ரத்தினசபாபதி, முனைவர்கள் ஐ.பி.கனகசுந்தரம், பி.முருகையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.