election-2019

img

காவலாளியை நேபாளில் தேடிக்கொள்வோம்... எங்களுக்கு தேவை பிரதமர்தான்

லக்னோ, ஏப்.6-உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் இணைந்துபோட்டியிடும், ராஷ்ட்ரிய லோக் தளம்கட்சித் தலைவர் அஜீத் சிங், அம்மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தீவிரப்பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும், அது தன்னாலேயே நடந்ததுஎன்று கூறுபவராக பிரதமர் மோடிஇருக்கிறார். இப்படியே போனால், இலங்கைக்குச் சென்று ராவணனையே கொன்றதாகவும் அவர் கதை சொல்வார்.இப்போது தன்னை ‘சவுகிதார்’ (காவலாளி) என்று மோடி அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் சொல்வது என்னவென்றால், இந்த நாட்டுக்குத் தேவை நல்ல பிரதமர்தானே தவிர, காவலாளி அல்ல. காவலாளியை நாங்கள் நேபாளத்தில் இருந்து வரவழைத்துக் கொள்வோம்.பிரதமர் மோடி அணியும் உடைகளுக்கு மட்டும், ஆண்டுக்குப் பல கோடிசெலவாகிறது என்று கூறுகிறார்கள். அவர் அணியும் தொப்பியை நாமெல் லாம் பார்த்திருக்கவே முடியாது. எங்கேதான் தேடிப் பிடித்து அவற்றை வாங்குகிறாரோ தெரியவில்லை. ஆனால், இவ்வளவையும் செய்துவிட்டு, தன்னை பிச்சைக்காரர் என்று கூறிக் கொள்கிறார். பிச்சைக்காரர்கள் இப்படித்தான் சொகுசாக இருப்பார்கள் என்றால், என்னையும் பிச்சைக்காரனாக்குமாறு அந்த கடவுளிடம் நான் கேட்கப் போகிறேன்.ஆனால் மக்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு விட்டார்கள். அதனால்தான் மோடி செல்லும் இடங்களிலெல்லாம் ‘ஹாய் ஹாய் மோடி, பைபை மோடி’ என்று கேலி செய்ய ஆரம் பித்து விட்டார்கள். இந்த தேர்தலில் அவரையும் அவரது கட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள்.இவ்வாறு அஜீத் சிங் பேசியுள்ளார்.