சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று இன்று வாக்களித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திமுக தலைவர் என்கிற முறையில் கேட்டுக்கொள்வது, அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும், ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்களது வாக்கு அமைந்திட வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரத்தில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது. காரணம் வாக்குகளை வாங்க 500, 1000, 2000, 5000, 10,000 வரை பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் மீறி பணத்திற்கு அடிபணியாமல், தமிழக மக்கள் முறையாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
COMMENT
வாக்கு எந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக வாக்குச்சாவடிகளில் உள்ள முகவர்கள், கட்சி முகவர்கள் புகார் அளித்துள்ளனர். அதனை சரி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. பழுதாகி இருக்கும் பெட்டிகளை உடனடியாக சரி செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.