பாஜக வேட்பாளர் 3 கோடிவரை சொத்து இருந்தும் பான்கார்டு இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சோலாபூர் மக்களவைத் தொகுதியில் 63 வயது நிரம்பிய இந்துதுவா அமைப்பைச்சேர்ந்த ஜெய்சிதேஷ்வர் சிவாச்சாரியா மகாராஜ் என்பவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த 1990ல் இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சுமார்ரூ6.46 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்து மற்றும் ரூ2.72 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும் உள்ளது என்று அவருடைய பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 3 கோடி மதிப்பிலான சொத்து இருந்து அவரிடம் இதுவரை பான்கார்டு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சாதாரணமாக வங்கிகளில் ரூ.50000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்தாலே பான்கார்டு கேட்கும் வங்கிகள் சாமியாரின் பணபரிவர்த்தனை எப்படி ஏற்றுக்கொண்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. வரிஏய்ப்பை தடுக்கவே பண பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகிறதுஎன்று மோடி அரசு பதவியேற்றதில் இருந்து பாஜகவினர் வாய்ச்சவடால் அடித்தனர். ஆனால் தற்போது பாஜகவின் சாமியார் வேட்பாளரிடம்3 கோடிரூபாய் வரை சொத்து இருந்தும் இதுவரை அவரிடம் பான்கார்டு இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மகராஜ் காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஷ் கட்சியைச் சேர்ந்த சுஷில் குமார் சிண்டேவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது