தரங்கம்பாடி, ஏப்.3-நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல்பிரச்சார பொதுக் கூட்டத்தில் மார்க சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மருத்துவர் ராமதாஸ் வழக்கம் போலவே அதிமுக-திமுகவை புறக்கணியுங்கள் எனஅதிமுக கூட்டணியிலிருந்து கொண்டேபேசி வருகிறார். அதைபோல அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசன் ராமதாஸ் பக்கத்தில் இருக்கும் போதே ஆப்பிள்சின்னத்தில் வாக்களிக்க சொல்றாரு. அந்த கூட்டணியே மதிகுழம்பி போய்இருக்கிறது. 156 பக்கத்துக்கு அதிமுகஅரசின் ஊழல் குறித்த புகாரை ஆளுநரிடம் கொடுத்த அன்புமணியும், ராமதாசும் இன்று எடப்பாடியை போலயாருமே இல்லனு புகழ் பாடுகின்றனர்.எடப்பாடி பழனிசாமி காமராசர் போலவும், அண்ணா போலவும் ராமதாசுக்கு தெரிகிறாராம். பசுமை மண்டலமாக இருந்த காவிரி டெல்டாவை கெமிக்கல் மண்டலமாக மாற்றி வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தமிழகத்தை தாரைவார்க்க துடிக்கின்றனர். மீண்டும் மோடியும் எடப்பாடியும் ஆட்சிக்கு வந்தால் காவிரி அத்தியாயமே முடிந்து போய்விடும் என அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாகசாடினார்.
‘எந்த வாத்தியார் பாடம் எடுத்தாரோ?
தரங்கம்பாடி, ஏப்.3-நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீத்தேன் திட்டம்தான் ஆபத்தானது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆபத்தானது இல்லை என கூறி வருவது குறித்துசெய்தியாளர்கள் கேட்டதற்கு, ஓ.எஸ்.மணியனுக்கு எந்த வாத்தியார் பாடம்எடுத்தாரோ? ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் முற்றிலும் அழிவதோடு, மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களும் ஏற்படும். அந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை வேண்டுமானால் தருகிறோம் அதை வாங்கி அவர் தெரிந்து கொள்ளட்டும் என பதிலளித்தார்.