election-2019

img

சென்னை: காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது


சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நந்தனம் கலைக்கல்லூரியில் காலை 7 மணிக்குப் பதில் 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அதிகாரிகள் வராததால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவும் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.