வெள்ளி, மார்ச் 5, 2021

election-2019

img

எம்.செல்வராஜை ஆதரித்து வைகோ பரப்புரை

நாகப்பட்டினம், ஏப்.4-மதச்சார்பற்ற முபோக்குக் கூட்டணிசார்பில், நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜுக்கு வாக்குக் கேட்டு, மறுமலர்ச்சி திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, வியாழக்கிழமை அன்று நாகப்பட்டினத்திலும் கீழ்வேளூரிலும் ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக் கூட்டங்களில் பரப்புரையாற்றினார்.நாகை அவுரித்திடலில் வியாழன் மாலை 4.45 மணிக்கும், கீழ்வேளூரில் மாலை 6 மணிக்கும் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்குத் தி.மு.க.நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் ம.திமு.க ஒன்றியச்செயலாளர் வெ.ஸ்ரீதரன் வரவேற்புரையாற்றினார். ஜி.மணி, எல்.என்.இளங்கோவன், ஜி.அய்யாபிள்ளை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர்.இரு கூட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, கீழ்வேளூர்சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன்(திமு.க.), சி.பி.ஐ. தேசியக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கோ.பழனிச்சாமி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், ம.தி.மு.க.மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.மோகன் மற்றும் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், கல்லார் ரபீக், சி.கே.கனகராஜ், எஸ்.குமரேசன், எம்.ஓ.எம். செய்யதுஅலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வேட்பாளர் எம்.செல்வராஜ் வாக்குகள் கேட்டு உரையாற்றினார். ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ,எம்.செல்வராஜைப் பல்லாயிரக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ம.தி.மு.க. நாகை நகரச் செயலாளர் பால.ராஜேந்திரசோழன் நன்றி கூறினார். 

;