election-2019

img

பால் குடிக்கும் பச்சைகுழந்தை மற்றும் தாய்யை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் பாசிசத்தின் கோர பற்கள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 19 அன்று, இடதுசாரிகள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக வாரணாசியில் அமைதியாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 60 பேர்களை சிறையில் அடைத்து உள்ளது உத்திரபிரதேச அரசு.

இதில் இளம் போராளிகள் ரவிசேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா சிங் உள்ளனர். அவர்களுக்கு 11 மாத தாய் பால் குடிக்கும் கை குழந்தை இருக்கிறது.
இன்று ஒரு வார காலமாக தாய் சிறையில். தாய் பால் இல்லாமல் பிஞ்சு குழந்தை தவிக்கிறது.
யோகி அரசின் அடக்குமுறைக்கு ஏதிராக வன்மையான கண்டன குரல் எழுப்புவோம்.
நரசிம்மன் சங்கரய்யா முகநூல் பதிவு.