எந்த சாதி, மதம் என்றில்லாமல் மருத்துவச் சேர்க்கையை மத்தியத்துவப்படுத்தி நீட்தேர்வைக் கொண்டு வந்து பணம் இருப்பவர்கள்மட்டுமே தேர்வு எழுதி டாக்டர் ஆகலாம் என்றநிலைக்கு தள்ளியவர்களுக்கா உங்கள் ஓட்டு?
புதிய கல்விக் கொள்கையில் "உயர்கல்விக்கு இனி பணம் செலவழிக்க முடியாது. மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்திகல்லூரியை நடத்துங்கள்" என்று கூறி அரசுக்கல்லூரிகளையும் தனியார் சுய நிதிக் கல்லூரிகள் போல் மாற்றத் துடிக்கும் பாஜகஅரசு நீடிக்கவா உங்கள் வாக்கு?
எம்.பில். படியுங்கள், பிஎச்டி படியுங்கள்.ஆனால் முன்பு இருந்ததைப் போல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பணம் செலவழிக்க முடியாது என்று நிதியைக் குறைத்தமோடி ஆட்சி நீடிக்கவா உங்கள் வாக்கு
கல்லூரிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகலாம் என்று கனவு கண்டு கல்லூரியில்படித்து வரும் மாணவர்களே மோடி அரசுஇதற்கான ஆராய்ச்சி படிப்பு இடங்களைக் குறைத்து விட்டது தெரியுமா? மறுபுறம்தரம் என்று பெயரில் போட்டித் தேர்வு வழியாகத் தான் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சேர்க்கை. ஆக ஏழை எளியவர்கள் கல்லூரிஆசிரியர்களாக வரக் கூடாது என சொல்லாமல் சொல்லும் மோடிக்கா உங்கள் வாக்கு?
இந்திய நாட்டின் 47 விழுக்காடு கிராமங்களில் இன்றும் பள்ளிக்கூடம் இல்லை.ஆனால் இருக்கும் பள்ளிக் கூடங்களையும் மூடிவிட மத்தியில் ஆளும் மோடி அரசு உத்தரவு. பள்ளிக் கூடம் இருந்தால் தானே கல்லூரிக்கு வருவீர்கள் என பள்ளிக் கல்விக்கும் வேட்டு வைக்கும் மோசடிக் கும்பலுக்கா உங்கள் ஓட்டு?
இப்போது நாம் படிக்கும் கல்லூரிபல்கலைக்கழகங்களைத் தரம் உயர்த்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யாமல் பத்தாயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தாரை வார்க்கிறது மோடி அரசு. அதிலும் குறிப்பாக இன்னும் துவங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் அம்பானியின் கூட்டாளிக்கா உங்கள் வாக்கு?நாம் படித்து வரும் பெரிய பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தப் போகிறோம் என்று கூறி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார்கள். கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை என்பது போல இட ஒதுக்கீட்டையும் வேலைவாய்ப்பையும் பறித்தது மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பேராசிரியர்களை வரவேற்கிற இந்த கபடதாரிகளுக்கா உங்கள் வாக்கு?
உங்களைப் போலவே ஒன்றுக்கு இரண்டுபரீட்சைகளில் உலகமறிந்த விஞ்ஞானி கார்ல்சாகனை தனது கனவுநாயகனாகக் கொண்டுஇலட்சிய வேட்கையுடன் ஐதராபாத் மத்தியபல்கலைக்கழகத்தில் படித்து வந்தரோகித் வெமுலா என்கிற மாணவரை தனதுஅரசியல், அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுவனப் படுகொலை செய்த இந்தவகுப்பு வாத சக்திக்களுக்கா உங்கள் வாக்கு?
புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கி அனைத்து மத்தியபல்கலைக்கழகங்களிலும் தங்கள் உரிமைக்காகப் போராடிய கன்னையாகுமார் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் மீது தேசவிரோத சட்டத்தை ஏவிய இந்த மாணவர் விரோத அரசுக்கா உங்கள் வாக்கு?
எல்லா மத்திய பல்கலைக்கழகங்கள் உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ்.காரர்களை மட்டுமே நியமித்து அனைத்து அறிவியல் பூர்வமான செயல்களையும் முடக்குகின்றனர். இந்த முடக்கு வாதத்தை ஏற்றுக் கொள்ளாதோர் மீது வன்முறையை ஏவுகின்றனர். அறிவியலையே கேலிக் கூத்து ஆக்கி வருகின்றனர்.நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்முதல் அனைத்து உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளையும் போலி மேதைகள் என்றுபேசி வருகின்றனர். இப்படி நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கும் அறிவியலுக்கும் எதிரானவர்களுக்கா உங்கள் வாக்கு?எனவே மாணவர்களே இளைஞர்களே நமது தலையாய கடமை நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றுவது. எனவே வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் திமுக இடதுசாரி கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களிக்க மறவாதீர்கள்.