education

img

BECIL-ல் வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 2684

நொய்டாவில் உள்ள “Broadcast Engineering Consultants India Ltd”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Skilled Manpower
காலியிடங்கள்: 1336
சம்பளம்: ரூ.9,381
வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electrical/ Wireman டிரேடில் ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Hindi மற்றும் English-ல் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Un-Skilled Manpower
காலியிடங்கள்: 1342
சம்பளம்: ரூ.7,631
வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Hindi மற்றும் English-ல் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Consultant (Electrical Engineering)
காலியிடங்கள்: 4
சம்பளம்: ரூ.30,000 - 50,000
கல்வித்தகுதி: Electrical Engineering பாடப்பிரிவில் B.Tech. பட்டப் படிப்புடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர்: Accounts Executive
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.20,000 - 30,000
கல்வித்தகுதி: B.Com./ M.Com. பட்டம் அல்லது MBA பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. (SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.250). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.beciljobs.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.7.2019 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.