education

img

மத்திய அணுசக்தி துறையில் வேலை வாய்ப்பு 

மத்திய அணுசக்தி துறையின் கட்டுமானம், சேவைகள் மற்றும் எஸ்டேட் மேலாண்மை இயக்குநரகத்தில் காலியாக உள்ள 33 டெக்னிக்கல் அலுவலர், டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 33 

பணி: Technical Officer/C (Civil) - 02, Technical Officer/C (Mechanical) - 01, Scientific Assistant/B (Civil) - 06, Scientific Assistant/B (Mechanical) - 02, Scientific Assistant/B (Electrical) - 02, Technician/B (Plumbing) - 04, Technician/B (Carpentry) - 04, Technician/B (Masonry) - 02, Technician/B (Fitter) - 02, Technician/B (AirConditioning) - 02, பணி: Technician/B (Electrical) - 06.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 29.04.2022 தேதியின்படி, டெக்னிக்கல் பணிக்கு 35க்குள்ளும், சயின்டிபிக் பணிக்கு 30க்கும், டெக்னீசியன் பணிக்கு 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு, டிரேடு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: டெக்னிக்கல் பணிக்கு ரூ.500, சயின்டிபிக் பணிக்கு ரூ.300, டெக்னீசியன் பணிக்கு ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: http://dcsem.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer, Recruitment Section, Directorate of Construction, Services & Estate Management, 2 nd floor, Vikram Sarabhai Bhavan, Anushaktinagar, Mumbai - 400 094.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள்: 29.04.2022

மேலும் விவரங்கள் அறிய http://dcsem.gov.in/resources/uploads/advertisements/Advt_01_2022_14882560061648202587.pdf என்ற லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும்.