economics

img

வருவாய் மட்டும் ரூ. 56 ஆயிரத்து 406 கோடி.... ரூ.1.84 லட்சம் கோடி பிரீமியம் வசூலித்து எல்ஐசி சாதனை....

புதுதில்லி:
கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும்ரூ. 1 கோடியே 84 லட்சம் கோடி ரூபாய்பிரீமியம் வசூலித்து, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சாதனைபடைத்துள்ளது.கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த பண நெருக்கடியில் தள்ளப்பட்டனர். வேலைவாய்ப்புகளும், தொழில் களும், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஆனாலும், அனைத்து சவால்களையும் மீறி பிரீமியம் வசூலில் எல்ஐசி சாதனை படைத்துள்ளது. மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2 கோடியே10 லட்சம் பாலிசிகளை எல்ஐசி பெற்றுள்ளது. இதில் 2021 மார்ச் மாதத்தில்மட்டும் 47 லட்சத்து 72 ஆயிரம் பாலிசிகளை கொள்முதல் செய்துள்ளது. இது2020 மார்ச் மாத பாலிசி கொள்முதலை விட 299 சதவிகிதம் அதிகம்.மேலும், 2020-21ஆம் நிதியாண்டில் பிரீமியம் தொகை மூலமான வருவாயாக மட்டும் ரூ. 56 ஆயிரத்து 406 கோடியை எல்ஐசி ஈட்டியுள்ளது. இது10.11 சதவிகித வளர்ச்சியாகும். எல்ஐசி நிறுவனத்தின் பென்சன் மற்றும் குழு திட்டங்கள் வாயிலாக தொழில் பிரீமிய வருவாயாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 768 கோடி ரூபாய்கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 749 கோடிரூபாயாகவே இருந்தது.

இவற்றின் மூலம், இந்திய இன்சூரன்ஸ் துறையில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி 75 சதவிகித வர்த்தகத்துடன், ஏனைய தனியார் நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து 2020-21 நிதியாண்டிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, 2021 மார்ச் மாதத்தில் மட்டும் 81 சதவிகித இன்சூரன்ஸ் வர்த்தகத்தை கைப்பற்றி எல்ஐசி ஆதிக்கம் செலுத்தியுள் ளது.

;