economics

img

பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக சரிவு

உச்சத்தை தொட்ட வேலையின்மை

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு 2022 நவம்பரில், முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்திய  பொருளாதாரக் கண்காணிப்பு மையத் (Centre for Monitoring Indian Economy - CMIE) தரவுகளின் படி 2022 அக்டோபரில் 7.77 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், நவம்பரில் 8.0 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  முக்கியமான நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பைக் கண்டுள்ளது. அக்டோபரில் 7.21 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை, நவம்பரில் 8.96 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சற்று வேலையின்மை குறைந்துள்ளது. அக்டோபரில் 8.04 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை, நவம்பரில் 7.55 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனினும் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் நவம்பரில், முந்தைய 3 மாதங்களில் இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானா மாநிலம் 30.6 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மையை பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (24.5 சதவிகிதம்), ஜம்மு - காஷ்மீர் (23.9 சதவிகிதம்) பீகார் (17.3 சதவிகிதம்), திரிபுரா (14.5 சதவிகிதம்), ஜார்க்கண்ட் (14.3 சதவிகிதம்), அசாம் (14 சதவிகிதம்), கோவா (13.6 சதவிகிதம்), தில்லி (12.7 சதவிகிதம்), ஆந்திரப் பிரதேசம் (9.1 சதவிகிதம்), இமாசல பிரதேசம் (8.1 சதவிகிதம்), பஞ்சாப் (7.8 சதவிகிதம்), மத்தியப் பிரதேசம் (6.2 சதவிகிதம்), தெலுங்கானா (6 சதவிகிதம்), கேரளா (5.9 சதவிகிதம்), மேற்கு வங்கம் (5.4 சதவிகிதம்), உத்தரப் பிரதேசம் (4.1 சதவிகிதம்), தமிழ்நாடு (3.8 சதவிகிதம்), மகாராஷ்டிரா (3.5 சதவிகிதம்), புதுச்சேரி (2.9 சதவிகிதம்), குஜராத் (2.5 சதவிகிதம்), மேகாலயா (2.1 சதவிகிதம்), கர்நாடகா (1.8 சதவிகிதம்), ஒடிசா (1.6 சதவிகிதம்), உத்தரகண்ட் (1.2 சதவிகிதம்), சத்தீஸ்கர் (0.1 சதவிகிதம்) என நவம்பரில் வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளன.

புதுதில்லி, டிச. 1 - நடப்பு 2022-23 நிதியாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic product - GDP) வளர்ச்சி 6.3 சதவிகிதமாக சரிந்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின், இதே இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.4 சத விகிதமாக இருந்த நிலையில், அதைக் காட்டிலும் தற்போது 2.1 சதவிகிதம் அள விற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டிலும் கூட, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல்  காலா ண்டில், இந்தியப் பொருளாதாரம் 13.5 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஆனால், அடுத்த 3 மாதங்களுக்குள் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார  வளர்ச்சி சதிபாதியாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8  சதவிகிதத்தில் இருந்து 7 சத விகிதத்திற்குள் இருக்கும் என்று பெரும் பாலான பொருளாதார நிபுணர்கள் தெரி வித்து இருந்தனர். 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' (SBI) வங்கியும் 5.8 சத விகிதம் என்றும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 6.1 முதல் 6.3 சதவிகிதம் வரை இருக்கும் என்றும் கணிப்புக்களை வெளியிட்டிருந்தனர். அதன்படியே தற்போது, 2-ஆவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவிகிதமாக பதிவாகி உள்ளது. இதுதொடர்பான விவரங்களை தேசிய புள்ளியல் அலுவலகம் (The National Statistical Office - NSO) புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

நாட்டின் நிதிப் பற்றாக்குறை 45.6 சதவிகிதத்தை தொட்டது!

நாட்டின் நிதிப்பற்றாக்குறை நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல் - அக்டோபர்) ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 45.6 சதவிகி தத்தை தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ஒன்றிய அரசுக்கு ரூ. 13  லட்சத்து 86 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. அதேசமயம், செலவுகள் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக இருந்துள் ளது. அந்த வகையில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அரசின் நிதிப்பற்றாக் குறை ரூ. 7 லட்சத்து 58 ஆயிரம் கோடியாக அதி கரித்துள்ளது.

8 அடிப்படைத் தொழிற்துறைகளின் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி!

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகள் நாட்டின் அடிப்படைத் தொழிற்துறை களாக கருதப்படுகின்றன. நாட்டின் தொழில்து றை உற்பத்தியில், இந்த 8 தொழிற்துறைகள் மட்டுமே 40.27 சதவிகித பங்களிப்பை கொண்டி ருக்கின்றன.  இந்நிலையில், இந்த அடிப்படைத் தொழிற்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2021 அக்டோபரில் 8.7 சதவிகிதமாக இருந்த நிலையில், இது 2022 அக்டோபரில் வெறும் 0.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. முந்தைய செப்டம்பர் மாதத்தில்கூட இவற்றின் வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் நல்ல கட்டமைப்பு உள்ளது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காமெடி ஜிடிபி சரிவு, தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி, வேலையின்மை, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ள  நிலையில், “இந்தியாவிடம் நல்ல கட்டமைப்பு உள்ளதாகவும் பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும்” என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். “பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றி அடைவோம்.  இந்த விவ காரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை  தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும். உணவுப் பொருட்களின் விலைகள் மீதான விநியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. நான் ஒரு நல்ல, வேகமாக வளரும் இந்தியப் பொரு ளாதாரத்தையும் அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கி றேன்” என்று கமெடி செய்துள்ளார்.

 

;